ஐபோன் 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி, முந்துங்கள்

ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாடு ரூ.79,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையில், 6% தள்ளுபடி கிடைக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2022, 02:08 PM IST
  • iPhone 13 இல் சிறப்பு தள்ளுபடி
  • பிக் பச்சட் தமால் விற்பனையில் சிறந்த சலுகைகள்
  • பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையின் கடைசி நாள் இன்று.
ஐபோன் 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி, முந்துங்கள் title=

ஐபோன் 13 இல் சிறந்த சலுகை: ஐபோன் 13 என்பது ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் ஆகும், இந்த போன் உலகம் முழுவதும் அதிகம் வாங்கப்படுகிறது. நீங்களும் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனை மிகவும் மலிவாக வாங்க விரும்பினால், உங்களுக்காக எங்களிடம் ஒரு சிறந்த சலுகை உள்ளது. இந்த ஐபோனை நீங்கள் பிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையில் இருந்து மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஒப்பந்தம் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

பிளிப்கார்ட் விற்பனை ஐபோன் 13 இல் சிறந்த சலுகை
ஆப்பிளின் ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாடு ரூ.79,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையில், 6% தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை பயன்படுத்திய பிறகு இந்த போன் 74,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், 16 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13 (128ஜிபி) விலை ரூ.58,900 ஆக ஆகும்.

மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ 

இன்னுமும் குறைந்த விலையில் ஐபோன் 13 ஐ வாங்கலாம்
பிளிப்கார்ட் இன் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைக்குப் பிறகு, ஐபோன் 13 இன் விலை ரூ.58,900 இல் கிடைக்கும். சில சிறப்பு பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை இன்னும் மலிவாக வாங்க முடியும். அதன்படி உங்களிடம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டு இருந்தால், இதில் 5 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். ஒட்டுமொத்தமாக ரூ.26 ஆயிரம் தள்ளுபடிக்குப் பிறகு ஐபோன் 13ஐ ரூ.53,900க்கு வாங்கலாம்.

ஐபோன் 13 அம்சங்கள்
ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாடு பற்றி பேசுகையில், இதில் ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 12ஜிபி அல்ட்ரா-வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள், நைட் மோட் மற்றும் ஸ்மார்ட் எச்டிஆர் 4 போன்ற பல புகைப்பட முறைகளையும் நீங்கள் காணலாம். இந்த போனின் முன்பக்க கேமரா 12எம்பி ஆகும்.

பிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையில், உங்களுக்கு பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன, இந்த விற்பனையின் கடைசி நாள் இன்றாகும்.

மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News