Flipkart Big Bachat Dhamal Sale: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி!! புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? குறைந்த விலையில் நல்ல அம்சக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்!! வாடிக்கையாளர்கள் நம்ப முடியாத மிகக்குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போனை வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ளிப்கார்ட் பிக் பசத் தமால் சேல்


ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் பிக் பசத் தமால் சேல் (Big Bachat Dhamal Sale) நடந்து வருகிறது. இந்த விற்பனை மார்ச் 3 ஆம் தேதி, அதாவது நேற்று  தொடங்கியது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனை மார்ச் மாதம் 5 ஆம் தேதி முடிவடையும். 


பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் சமீபத்திய ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரியல்மீ 10 சீரிஸின் (Realme 10 Series) ரியல்மீ 10 ப்ரோ 5ஜி (Realme 10 Pro 5G) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய போனை மிகவும் மலிவாக வாங்க முடியும். 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த போனை வெறும் 649 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்லலாம். இவ்வளவு குறைந்த விலையில் இதை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | ChatGPT-க்கு மூளையாக இருந்தவர் யார் தெரியுமா? எலோன் மஸ்குக்கு என்ன தொடர்பு?


Flipkart Big Bachat Dhamal விற்பனை: Realme 10 Pro 5G-வில் கிடைக்கும் சலுகைகள்


Realme 10 Pro 5G (128 GB) ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ. 20,999 ஆகும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதாவது ரூ.18,999க்கு இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியைத் தவிர இந்த ரியல்மி போனுக்கு பிளிப்கார்ட்டில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அதாவது பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் போனின் விலை மேலும் குறைக்கப்படும். 


Flipkart Big Bachat Dhamal விற்பனை: Realme 10 Pro 5G எக்ஸ்சேஞ்ச் சலுகை


Realme 10 Pro 5G ஸ்மார்ட்போனில் 18,350 ரூபாய் மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால் இந்த தள்ளுபடி கிடைக்கும். எனினும், இந்த பரிமாற்ற சலுகையின் முழு பலனையும் பெற, தாங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும், சமீபத்திய மாடலாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த சலுகையை பெற முடியும். 


இந்த அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் இந்த அசத்தலான Realme 10 Pro 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 649-க்கு வாங்கி செல்லலாம். 


மேலும் படிக்க | திடீரென குறைந்த ஐபோன் விலை: முட்டிமோதி வாங்கும் வாடிக்கையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ