திடீரென குறைந்த ஐபோன் விலை: முட்டிமோதி வாங்கும் வாடிக்கையாளர்கள்

Cashify's Holi Sale:கேஷிஃபையில் ஐபோன் 13-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை நடக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2023, 11:28 AM IST
  • Cashify-இன் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் விற்பனையானது ஸ்மார்ட்போன்களில் 50 சதவிகிதம் வரை நம்பமுடியாத தள்ளுபடியை உறுதியளிக்கிறது.
  • ஐபோன் 13-க்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
திடீரென குறைந்த ஐபோன் விலை: முட்டிமோதி வாங்கும் வாடிக்கையாளர்கள் title=

Cashify's Holi Sale: ஹோலி பண்டிகையை முன்னிட்டு கேஷிஃபையின் விற்பனை துவங்கியுள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்குவதற்கு இந்த விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் ஐபோன் வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதை புரிந்துகொண்ட ஐபோன் பிரியர்கள் மிக மும்முரமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சேலில் ஐபோன் வாங்கி வருகிறார்கள். இந்த விற்பனையின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

கேஷிஃபையில் ஐபோன் 13-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை நடக்கும். ஐபோன் 13 -ஐ இந்த சேலில் மிக மலிவாக எப்படி வாங்குவது என பார்க்கலாம். 

ஐபோன் 13 விலை குறைப்பு

Cashify-இன் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் விற்பனையானது ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு பிரீமியம் புதுப்பிக்கப்பட்ட போன்களில் 50 சதவிகிதம் வரை நம்பமுடியாத தள்ளுபடியை உறுதியளிக்கிறது. ஐபோன் 13-க்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போன் Cashify இல் ரூ.49,099க்கு கிடைக்கிறது. யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம். அதாவது, இதன் பிறகு போனின் விலை ரூ.47,626 ஆகக்குறையும்.

மேலும் படிக்க | வந்தாச்சு அப்டேட்… வாட்ஸ்அப்பில் இந்த புதிய வசதி அறிமுகம்

கேஷிஃபை ஹோலி விற்பனை

கேஷிஃபையின் ஹோலி விற்பனை, பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றுவதில் கூடுதல் தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள் போன்ற பிற அற்புதமான சலுகைகளையும் உள்ளடக்கியது. வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தொலைபேசியில் 6 மாத உத்தரவாதமும் 7 நாட்களுக்கான மாற்று உத்தரவாதவும் கிடைக்கும்.

விற்பனையின் போது, ​​பல பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும். ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் உள்ள வாடிக்கையாளர்கள், பல விலையுயர்ந்த போன்கள் இங்கு மிக மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொண்டு அந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | Netflix: ரூ.200-ஐ விட குறைந்த விலையில் அசத்தலான பிளான், விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News