Flipkart Offer: iPhone 12-ல் இதுவரை இல்லாத அளவு அசத்தல் தள்ளுபடி, முந்துங்கள்
ஒவ்வொரு முறையும் இருப்பது போலவே, இந்த முறையும் ஐபோன் 12 ஐ (iPhone 12) மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும்.
Flipkart Big Bachat Dhamal: பிளிப்கார்டில் இன்று முதல் பிக் பச்சத் தமால் விற்பனை (Flipkart Big Bachat Dhamal) தொடங்கியுள்ளது.
இந்த விற்பனையில், பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பிளிப்கார்டின் (Flipkart) இந்த ஆண்டின் முதல் பெரிய விற்பனை இதுவாகும். இங்கு அனைத்து தயாரிப்புகளுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கான கிராக்கி மிக அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் இருப்பது போலவே, இந்த முறையும் ஐபோன் 12 ஐ (iPhone 12) மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும். இன்று ஐபோன் 12 மினியில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. நீங்கள் ஐபோன் வாங்க திட்டமிட்டு, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த விற்பனையில், மிகக் குறைந்த விலையில் மலிவான 5G ஐபோனைப் பெறலாம். எப்படி பெறுவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு
Flipkart Big Bachat Dhamal: iPhone 12 Mini சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்:
ஐபோன் 12 மினியின் அறிமுக விலை ரூ.59,900 ஆகும். எனினும் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போன் ரூ.40,999-க்கு கிடைக்கிறது. அதாவது இந்த போனில் 31% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகும், பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் இதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னும் கணிசமாகக் குறையும்.
Flipkart Big Bachat Dhamal: iPhone 12 Mini இல் வங்கி சலுகைகள்
ஆக்சிஸ் வங்கி iPhone 12 Mini-க்கு 5% தள்ளுபடி வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,050 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.38,949 ஆகக் குறையும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இது போனின் விலையை மேலும் குறைக்கும்.
Flipkart Big Bachat Dhamal: iPhone 12 Mini இல் எக்ஸ்சேஞ்ச் சலுகை
ஐபோன் 12 மினியில் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனை (Smartphone) பரிமாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்களின் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வெண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,450 தள்ளுபடி கிடைக்கும். அனைத்து தள்ளுபடிகளும் முழுமையாக உங்களுக்கு கிடைத்தால், போனின் விலை ரூ.23,499 ஆக குறையும்.
ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR