iPhone 14 Pro Max: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மிகவும் விரும்பப்படும் ஒரு பிரீமியம் தொலைபேசியாகும். எனினும், இதன் விலை அதிகமாக இருப்பதால், இதனை அனைவராலும் வாங்க இயலாது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வாங்கும் ஆசை இருந்து, ஆனால், அதன் அதிகப்படியான விலை ( லட்ச ரூபாய்க்கு மேல்) காரணமாக வாங்க தயக்கம் காட்டும் நபரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த போனின் விலை உயர்ந்ததாக இருந்தாலும், இதற்கு அதிக க்ரேஸ் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நேரத்தில், இந்த அட்டகாசமான ஐபோனை வாங்க பம்பர் தள்ளுபடி கிடைக்கவுள்ளது. இதை நீங்கள் வாங்க, ரூ.40,000 வரை கொடுத்தால் போதும். இதை கேட்க உங்களுக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும், ஆனால் இது உண்மைதான். இதை பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 


ஃபேஸ்புக் மார்க்கெட்ப்ளேசில் மலிவாக கிடைக்கிறது


இந்த போனை ரூ.39,999 -க்கு வாங்கலாம் என்று கூறி எம்.ஜே.சஹாப் என்ற பயனர் பேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் விளம்பரம் செய்துள்ளார். பயனர் ஹோம் டெலிவரி செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த ஃபோனின் முழுமை மற்றும் நேர்த்தியை நிரூபிக்கும் வகையில், இதற்கான பில்லும் வழங்கப்படும் என்று பயனர் கூறுகிறார். ஆன்லைனில் தொடர்புகொள்வதன் மூலம் இந்தப் பயனரைத் தொடர்புகொள்ளலாம்.


மேலும் படிக்க | ஆப்பிள் 14 மொபைலை பின்னுக்குத் தள்ளும் சாம்சங்கின் புது மாடல்... என்ன தெரியுமா?


ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் பயனர்களுக்கு 6.7 இன்ச் சூப்பர் ரெடினா AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த சாதனம் A15 பயோனிக் சிப் உடன் வருகிறது. ஆகையால், இதன் வேகத்தைப் பற்றி பயனர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஃபோனின் வடிவமைப்பு பயனர்களை கவரும் வண்ணம் மிக அருமையாக உள்ளது. இதன் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.


ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஸ்மார்ட்போன் முன்பை விட சிறந்த டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இது கேமரா பிரியர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த அம்சங்கள் சிறந்த லோகோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய பயனர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. 


கூடுதல் தகவல்


ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இது குறித்த கசிவுகள் மற்றும் வதந்திகள் சில நாட்களாக ஐபோன் பிரியர்களுக்கு இடையே பலமான சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2023 -இல் வரவுள்ள இந்த ஐபோன் எப்படி இருக்கும் என்று கசிவுகள் கூறியுள்ளன. iPhone 14 Pro இன் நான்கு அம்சங்கள் iPhone 15 இல் கிடைக்கும் என இந்த கசிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ. 1.2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த போனில் இந்த அம்சங்கள் கிடைக்கின்றன. 


கடந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஐபோன் 15 மற்றும் பிளஸில் கிடைக்கும் என கசிவுகளில் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்த முறை போன் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் இது குறித்து ஆப்பிள் நிறுவனம் எதுவும் கூறவில்லை. இந்த வடிவமைப்பு தற்போது ப்ரோ மாடல்களில் கிடைக்கின்றது. கடந்த ஆண்டு, ஐபோன் 14 எந்த வடிவமைப்பு மாற்றமும் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​​​அது அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை வடிவமைப்பு மாற்றங்களைக் காண முடியும் என ஊகிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ஜூலை 15-16 Amazon Prime Day Sale: ஏகப்பட்ட சலுகைகள்.. ஷாப்பிங்குக்கு ரெடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ