இந்தியாவின் முதல் பிட்காயின் ATM-யை பெங்களூரில் நிறுவியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கிரிப்ட்டோ கரண்சி ATM-யை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி துவங்கிவைத்தனர். 


இந்நிலையில், தற்போது பெங்களூருவில் பிட்காயினுக்காக நிறுவப்பட்ட ATM-ஐ பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனை நிறுவியவரை கைது செய்துள்ளனர். தும்கூரைச் சேர்ந்த ஹரீஸ் என்பவர், பெங்களூரு ராஜாஜி நகரில் யுனோகாயின் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். இவர், பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில், கெம்ப் ஃபேர்ட் மாலில் (Kemp Fort Mall), கியோஸ்க் எனப்படும் சிறு வங்கி முறையில், பிட்காயினுக்காக பிரத்தியேகமாக ATM ஒன்றை நிறுவினார். இந்த ஏடிஎம் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களது யூசர் ID-யைப் (USER ID) பயன்படுத்தி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.


ரிசர்வ் வங்கி பிட்காயின் பரிவர்த்தனை தடை விதித்திருக்கும் நிலையில், இந்த ATM தொடங்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. இதையறிந்த பெங்களூரு காவல்துறையினர், அந்த பிட்காயின் ATM-யை பறிமுதல் செய்ததோடு மட்டும் அல்லாமல், அதனை நிறுவிய ஹரீசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடமிருந்து, 2 லேப்டாப், மொபைல்கள், UNO முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், கிரிப்டோ கரெண்சி டிவைஸ், சுமார் 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.