மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை நவம்பர் 30ஆம் தேதி வரை பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. 


ALSO READ: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை சரிவு! 


Mahindra KUV100 NXT மற்றும்  Scorpio
Mahindra and Mahindra நிறுவனத்தின் மஹிந்திரா KUV100 NXT SUV மொத்தம் ரூ.61,055 வரை தள்ளுபடி பெறுகிறது. இதில் ரூ.38,055 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.20 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 வரை கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும். அதேபோல் மஹிந்திரா (Mahindra) ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.32,320 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும், ரூ.4,000 வரையிலான கார்ப்பரேட் சலுகைகளும், ரூ.13,320 வரை கூடுதல் சலுகைகளும் அடங்கும்.


Mahindra Alturas G4 மற்றும்  XUV300 
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு ரூ.81,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.11,500 வரை கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் ரூ.20,000 வரையிலான பிற சலுகைகளும் அடங்கும். இதேபோல், நிறுவனத்தின் XUV300 சப்காம்பாக்ட் SUV ரூ.49,000 வரை தள்ளுபடி பெறுகிறது. இதில் ரூ.15,000 வரையிலான ரொக்க சலுகைகள், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.4,500 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.5000 வரையிலான பிற சலுகைகளும் அடங்கும்.


Mahindra Marazzo மற்றும் Bolero
மஹிந்திரா மராஸ்ஸோ MPVக்கு ரூ.40,200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் இந்த MPVயில் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 வரை பணத் தள்ளுபடியையும், ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் நன்மைகளையும், ரூ.5,200 வரையிலான கார்ப்பரேட் சலுகைகளையும் பெறலாம். அதேபோல், மஹிந்திராவின் பிரபலமான பொலிரோ எஸ்யூவிக்கும் ரூ.13,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும், ரூ.3,000 வரையிலான கார்ப்பரேட் சலுகையும் அடங்கும்.


ALSO READ: Cheapest Cars: இந்தியாவின் டாப் 5 மலிவு விலை மின்சார கார்களின் விலை, பிற விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR