Amazon Electronic Festive Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், செப்டம்பர் 6 முதல், செப்டம்பர் 10 வரை, அதாவது நாளை வரை பண்டிகை கால சலுகையாக, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75 சதவீதம் வரை பம்பர் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ரூ.20,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.25,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் கிடைக்கும். சலுகை விற்பனை குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy M35 5G ஸ்மார்ட்போனில் சிறந்த தள்ளுபடி


அமேசானின் சலுகை விற்பனையில் Samsung Galaxy M35 5G ஐ 17,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போன் ரூ.24,499 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


OnePlus Nord 4 ஸ்மார்ட்போனில் பம்பர் தள்ளுபடி


ஒன்பிளஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய OnePlus Nord 4 ஸ்மார்ட்போனில் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன், அமேசானில் நடைபெற்று வரும் சலுகை விற்பனையில் ரூ.27,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த போனின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது. இது AMOLED டிஸ்ப்ளே, மெட்டாலிக் பாடி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 செயலி, 5500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ள இந்த போனை மலிவான விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு.


Realme Narzo 70 Pro 5G தள்ளுபடி விபரம்


Realme Narzo 70 Pro 5G போனை இதுவரை இல்லாத அளவில் குறைந்த விலையில் வாங்கலாம். அமேசானில் நடந்து வரும் சலுகை விற்பனையில் இந்த போன் 16,249 ரூபாய்க்கு கிடைக்கும். போனின் விலை ரூ.26,999. எனினும் இந்த போன் ரூ.18,999 விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


Xiaomi Smart TV A Pro 4K தள்ளுபடி விபரம்


Xiaomi 43 இன்ச் 4K ஸ்மார்ட் டிவியை ரூ.25,249 ஆரம்ப விலையில் வாங்கலாம். ரூ.42,999 எம்ஆர்பி கொண்ட இந்த டிவி சலுகை விற்பனையில் ரூ.26,999 என்ற விலையில் சலுகை விற்பனையில் பட்டியலிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள்


Boat AirDopes 311 Pro தள்ளுபடி விபரம்


அமேசானில் நடந்து வரும் சலுகை விற்பனையில் Boat AirDopes 311 Pro ஐ 1,199 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த வயர்லெஸ் இயர்பட்கள் ரூ.4,990 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


Amazfit Active Edge Smartwatch தள்ளுபடி விபரம்


அமேசானின் சலுகை விற்பனையில் Amazfit Active Edge ஸ்மார்ட்வாட்சை ரூ.9,999 விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.19,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ