அகவுண்ட் நம்பர் மறந்துட்டா... இந்த வழியில் ஈஸியாக பேங்க் பேலன்ஸை செக் செய்யலாம்!
Bank Balance: வங்கி கணக்கு எண் இல்லாமலேயே ஸ்மார்ட்போன் இல்லாத சாதாரண போனிலும் நீங்கள் வங்கி கணக்கு இருப்பை ஈஸியாக பார்க்கலாம்.
Easy Way To Check Bank Balance: ஸ்மார்ட்போன் நம் அன்றாடத்தில் பல விஷயங்களை எளிமையாக்கிவிட்டது. குறிப்பாக, வங்கி சார்ந்த செயல்பாடுகளை ஸ்மார்ட்போன்கள் எளிமையாக்கி, பல இடங்களில் நன்மையையும் ஏற்படுத்தி தருகிறது.
வங்கிக் கணக்கை நிர்வகிப்பது, அன்றாட செலவுகளுக்கான பரிவர்த்தனைகளை UPI மூலம் செயல்படுத்துவது, நெட் பேங்கிங் போன்ற பல சேவைகள் ஸ்மார்ட்போனிலேயே செய்யப்படுகிறது. அந்த வகையில், வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பதும் பலவகையில் செய்யலாம். பட்ஜெட்டை பராமரிக்கவும், செலவுகளை கணக்கிடவும் பேங்க் பேலன்ஸை சீரான இடைவெளியில் பலரும் சரிபார்ப்பார்கள்.
அந்த வகையில், வங்கி கணக்கின் இருப்பை ஸ்மார்ட்போனிலேயே பல வகையில் சரிபார்க்கலாம். Google Pay, Phonepe போன்ற UPI செயலிகள் மற்றும் பயனர்களின் வங்கி சார்ந்த செயலி மூலமும் நீங்கள் இருப்பை சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால், இவை அனைத்திற்கும் வங்கி கணக்கை நீங்கள் செயலியுடன் இணைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், சில சூழலில் இந்த செயலிகள் இல்லாதபட்சத்தில், வங்கி கணக்கு எண்ணை கொடுக்காமலேயே உங்களின் வங்கியின் இருப்பை சரிபார்த்துக்கொள்ளும் வழிமுறை தற்போது உள்ளது. இதன்மூலம், வங்கி கணக்கு எண் உங்கள் நினைவில் இல்லாவிட்டாலும், உங்கள் வங்கி கணக்கு இருப்பை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள், கீ-பேட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இந்த சேவையை பெற நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை (Aadhaar Car) பயன்படுத்த வேண்டும். ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். இந்தச் செயல்முறை பல மணிநேரத்தை எடுக்கும் என எண்ண வேண்டாம். இந்த செயல்முறை சில நிமிடங்களில் முடிந்து உங்கள் கணக்கு இருப்பு உங்கள் போனில் காட்டும்.
மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியின் புதிய ATM விதி: பணம் எடுக்கும்போது இதில் கவனம் தேவை
செயல்முறை என்ன?
- உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் உங்கள் போனில் உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்க விரும்பினால், முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து *99*99*1# டயல் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் ஆதார் அட்டையில் 12 இலக்கங்களை உள்ளிட வேண்டும். உங்கள் ஆதாரின் 12 இலக்கக் குறியீட்டை நீங்கள் தட்டச்சு செய்தவுடன், சரிபார்ப்பு செயல்முறை முடிவடைய மீண்டும் 12 இலக்கக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- சில நிமிடங்களில், உங்கள் ஃபீச்சர் போனின் டிஸ்ப்ளேயில் ஒரு செய்தி தோன்றும், அதில் உங்கள் வங்கி இருப்பு தெரியும். இந்த செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் உங்கள் வங்கி இருப்பை ஒரு நொடியில் அறிந்து கொள்ளலாம்.
- இதைச் செய்ய ஒரு நிபந்தனை உள்ளது. உங்கள் தொலைபேசி எண் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும், இல்லையெனில் முதலில் உங்கள் ஆதார் அட்டை எண்ணை உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.
மேலும் படிக்க | வங்கி கணக்கில் இவ்வளவு பணத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ