வருகிறது புதிய சட்டம்.. இனி பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்டாக் பயன்படுத்துவது கடினம்
சமூக ஊடகங்களுக்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கப் போகிறது. இது சம்பந்தமாக, சட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.
புதுடில்லி: இனி நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), ட்விட்டர் (Twitter) மற்றும் டிக்டாக் (TikTok) கணக்கு போன்ற அனைத்து சமூக ஊடகங்களுக்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கப் போகிறது. உங்கள் ஐடி (ID verification) சரிபார்ப்பு இல்லாமல் இப்போது எந்த கணக்கையும் தொடங்க முடியாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக, சட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அடையாள சரிபார்ப்பு ஏன் அவசியம்?
இந்த நாட்களில் போலி செய்திகள், வதந்திகள், வகுப்புவாத செய்திகள் மற்றும் பெண்கள் மீதான அநாகரீகமான கருத்துக்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளன என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான சமூக விரோத செய்திகள் போலி கணக்குகள் மூலம் சமூக ஊடகங்களில் தவறாக பயன்படுத்துகின்றன. இப்போது இதுபோன்ற வழக்குகளை கண்டறிவதற்கு ஒரு புதிய சட்டம் தயாராக உள்ளது. இந்த புதிய சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் அதை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
அடையாள அட்டை (Identity Card) சரிபார்ப்பு எவ்வாறு இருக்கும்?
எந்தவொரு பிரபலமான சமூக ஊடகத்திலும் ஒரு கணக்கைத் திறப்பதற்கு முன்பு பயனர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என்று சட்ட வரைவை தயாரித்து வரும் அதிகாரி ஒருவர் கூறுகிறார். இதில், பயனர் தனது மின்னஞ்சல் ஐடிக்கு கூடுதலாக தொலைபேசி எண்ணை சரிபார்க்க கட்டாயமாக்கலாம். மேலும், பயனர்களின் இருப்பிடத்தை சரிபார்க்க இணைய நிறுவனங்கள் கேட்கப்படுகின்றன. இது போலி கணக்குகளை உருவாக்கத்தை குறைக்கும். மேலும், வதந்தி பரப்புபவர்களை அடையலாம் காணப்படும் என்று கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.