புதுடெல்லி: Vodafone-Idea தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு நான்கு ஸ்மார்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Vi திட்டங்களின் விலை ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 ஆகும். குறைந்த விலையில் அதிக நன்மைகள் கொண்ட திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்களை இந்த திட்டம் மகிழ்விக்கும். சில நாட்களுக்கு முன்பு Vi அதன் திட்டங்களின் விலையை உயர்த்தியது, இதன் காரணமாக பயனர்களுக்கு குறைவான ரீசார்ஜ் விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்த திட்டத்தை வழங்குவதன் மூலம், பயனர்களுக்கு பல விருப்பங்களை மீண்டும் Vi வழங்கியுள்ளார். இந்த புதிய திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vi Rs 155 Plan: Vi இன் (Vodafone Idea) ரூ.155 திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும், இதில் பயனர் 1GB டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 SMS ஆகியவற்றைப் பெற உதவும். 


ALSO READ | Jio vs Airtel vs Vi: உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் ரீசார்ஜ் திட்டம் எது?


Vi Rs 239 Plan: Vi இன் ரூ 239 திட்டத்தில் 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா பயனருக்கு வழங்கப்படுகிறது. இந்த அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.


Vi Rs 666 Plan: Vi இன் ரூ.666 திட்டம் 77 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இதில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கும். மற்ற பலன்களைப் பற்றி பேசினால், Binge All Night, Data Delight சலுகை மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் கிடைக்கும். இதன் மூலம், Vi Movies & TVக்கான அணுகல் கிடைக்கும்.


Vi Rs 699 Plan: Vi இன் ரூ.699 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது, இதில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில், பயனர் பிங்கே ஆல் நைட், டேட்டா டிலைட் சலுகை மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதிகளைப் பெறுவார். இதன் மூலம், Vi Movies & TVக்கான அணுகல் கிடைக்கும்.


ALSO READ | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR