வெர்ட்டு நிறுவனம் மெட்டாவெர்டு பெயரில் நியூ ஜெனரேஷன் ஸ்மார்ட்போனை லண்டனில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்ஃபோன் வெப்3 சாதனம் ஆகும். இதில் அதிகபட்சம் 18 ஜிபி மெமரி, 10TBவரை ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான டேட்டா உரிமை சூழலை உருவாக்க நினைப்பதாக வெர்ட்டு தெரிவித்துள்ளது. மெட்டாவெர்ட்டு மாடலில் 144Hz அல்ட்ரா-ஹை-பிரஷ் AMOLED பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் அதிகபட்சம் 18 ஜிபி ரேம், 1TB மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. வெப் 3 மொபைல் போனாக பயன்படுத்தும் போது 10TBவரை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய வெர்ட்டு ஸ்மார்ட்ஃபோனில் IMX787 35mm பிரைமரி கேமரா, ஆப்டிக்கல் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 



ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த ஸ்மார்ட்ஃபோனை 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இதில் பில்ட்-இன் A5 செக்யுரிட்டி சிப், SE+ TEE தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மெட்டாவெர்ட்டு மாடலில் வெப்2.0-இல் இருந்து வெப்3.0-க்கு எளிதில் மாற ஒற்றை பட்டன் வழங்கப்பட்டுள்ளது. வெப்3.0 மோடில் மெட்டாவெர்டு மாடல் காப்புரிமை பெற்ற கேமரா கொண்டிருக்கிறது. இந்த போனில் ஹோட்டல் முன்பதிவு, பரிசு பொருள் வாங்குவது மற்றும் ஏராளமான விஐபி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் அறிமுகமாகியுள்ள 5 புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ