Vodafone Idea வின் அறிவிப்பை கேட்டு நடுங்கியது ஜியோ
Vi தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .75 இலவச ரீசார்ஜ் இலவசமாக வழங்கி வருகிறது
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல புதிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி Vi தற்போது குறைந்த வருமான வாடிக்கையாளர்களுக்கு இலவச காலிங் மற்றும் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .75 ரீசார்ஜ் (Recharge Plans) இலவசமாக வழங்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கபட்ட ஊரடங்கில் Vi இன் பல வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த சிரமத்தை நீக்கும் விதமாக Vi நிறுவனம் இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ALSO READ | ஜியோவுடன் போட்டியிடும் விதமாக Vodafone Idea புதிய திட்டம் அறிமுகம்
இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் Vi இலிருந்து Vi நெட்வொர்க்கிற்கு அழைக்க 50 நிமிடங்கள் பெறுகிறார்கள். மேலும் 50MB டேட்டாவும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் 15 ஆகும். ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. Vi இந்த சலுகைக்கு Unlock 2.0 என்று பெயரிட்டுள்ளது.
இந்த சலுகையை நீங்கள் பெறவேண்டுமானால் நீங்கள் 44475 # ஐ டயல் செய்ய வேண்டும் அல்லது மிஸ்ட் கால் எண் 121153 ஐ அழைக்க வேண்டும். இதனுடன், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்புவதன் மூலமும் இது குறித்த தகவல்களை அளிக்கிறது.
மறுபுறம் Vi நிறுவனம் RC79 என்ற காம்போ திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 200 எம்பி தரவு ரூ .64 டாக் டைமுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், ரூ .128 டாக் டைம் தற்போது சலுகையின் கீழ் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ALSO READ | புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை Vi அறிமுகம், கடுப்பில் பயனர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR