Vi அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரூ.401 திட்டம்! இத்தனை சிறப்பம்சங்களா?
புதிய ரூ.401 போஸ்ட்பெய்ட் திட்டம் Sun NXT பிரீமியம் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, அதே சமயம் ரூ 401 போஸ்ட்பெய்ட் திட்டம் சோனி லிவ் Sony Liv சந்தாவையும் வழங்குகிறது.
வோடோஃபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக தற்போது ஒரு புதிய ரூ.401 போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவ இந்த போஸ்ட்பெய்டு திட்டம் இதே விலையில் இருந்தது தான் என்றாலும், தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் சில வழங்கப்பட்டுள்ளது. வோடோஃபோனின் புதிய ரூ.401 போஸ்ட்பெய்ட் திட்டம் Sun NXT பிரீமியம் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, அதே சமயம் ரூ 401 போஸ்ட்பெய்ட் திட்டம் சோனி லிவ் சந்தாவையும் வழங்குகிறது. டோஃபோனின் புதிய ரூ 401 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு மாதாந்திரத் திட்டமாகும். இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்களுக்கு 50ஜிபி 4ஜி டேட்டா, மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ், இந்தியாவிலுள்ள அனைத்து நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரூ 895 ரீசார்ஜ்..1 வருட வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் ஜியோ
இந்த திட்டத்தை ஆன்லைனில் வாங்கினால் முதல் மாதத்திற்கு 50ஜிபி கூடுதல் டேட்டா. இரவு நேரங்களில் அதாவது மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை பயனர்கள் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். தற்போது இந்த திட்டத்தில் கூடுதலாக சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதன்படி 12 மாத சன் NXT பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி நீங்கள் பல மொழிகளில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இசை வீடியோக்களை பார்த்து மகிழலாம். இதுதவிர இந்தச் சேவையை ஒரே நேரத்தில் மொபைல் மற்றும் டிவி ஆகிய இரண்டு திரைகளிலும் பார்க்கலாம்.
காம்ப்ளிமென்ட்ரி சந்தாவை பெற பயனர்கள் தங்கள் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் எண்ணைப் பயன்படுத்தி லாக் இன் செய்யலாம். விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆப் போன்றவற்றிற்காக 'விஐபி' அணுகல் வழங்கப்படுகிறது. விஐ செயலியில் ஹங்காமா இசை ஸ்ட்ரீமிங், ஜீ5பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பல கேம்களையும் பெறலாம். ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்திய பிறகுடேட்டா மீதம் இருந்தால், 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவரை பயன்படுத்தும் வாய்ப்பையும் வோடோஃபோன் ஐடியா வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ