Galaxy M53 5G - மாபெரும் தள்ளுபடி: சாம்சங்க் கேலக்சி எம்53 (Samsung Galaxy M53) தற்போது இந்திய சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் ஆகும். இதற்கு வாடிக்கையாளர்கள் இடையே அதிக தேவை உள்ளது. வாடிக்கையாளர்கள் இதை அதிகமாக விரும்புவதற்கு இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு முக்கிய காரணமாகும். இது மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கும் கடுமையான போட்டியை அளிக்கிறது.
நீங்களும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இப்போது நீங்கள் அதை மிகவும் மலிவு விலையில் வாங்கி பயன்படுத்தி மகிழலாம். சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங்கின் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் தள்ளுபடி பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்கள் சலுகை விலையில், இதை பெற முடியும் இந்த ஸ்மார்ட்போனின் சலுகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Samsung Galaxy M53: விவரக்குறிப்புகள்
Galaxy M53 5G இல், வாடிக்கையாளர்களுக்கு 6.7-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே இன்ஃபினிட்டி O Super AMOLED+ டிஸ்ப்ளே கிடைக்கிறது. இதன் புதுப்பிப்பு வீதம் 120Hz ஆகும். டிஸ்ப்ளேவில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது. இந்த ஃபோனில் நான்கு பின்புற கேமராக்கள் உள்ளன. இதில் முதன்மை லென்ஸ் 108 மெகாபிக்சல்கள். இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட், மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் டெப்த் மற்றும் நான்காவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ என்ற வகையில் உள்ளன.
மேலும் படிக்க | அதிகமாக Spam Call, Message வருகிறதா? வரமால் தடுக்க சில வழிகள்!
செல்ஃபி எடுக்க இந்த சாம்சங் போனில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கேலக்சி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிடி 900 பிராசசருடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. போனுடன் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கும், அதாவது மொத்தம் இந்த போனில் 16 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகை என்ன?
பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ. 32,999 ஆகும். எனினும், அதன் வலைத்தளத்தில் இருந்து இதை வாங்கினால், இந்த போனில் ஒரு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி நடைமுறைக்கு வந்த பிறகு, வாடிக்கையாளர்கள் இதை மிகவும் மலிவு விலையில் வாங்கலாம். ரூ.26,990 என்ற மிகக்குறைந்த விலையில் இதை வாங்க முடியும். இந்த வகையில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனை பிளிக்பார்ட்டில் வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும், ஆயிரக்கணக்கில் தள்ளிபடி கிடைக்கிறது.
மேலும் படிக்க | ChatGPT அறிமுகப்படுத்தியிருக்கும் API: ஆன்லைன் ஷாப்பிங்கில் விரைவில் புதிய புரட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ