வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வசதி
உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் நீங்கள் வீடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு வீடியோ கால் இணைக்கப்படும்.
வாட்ஸ் அப் வீடியோ கால் பயன்படுத்தும் முறை:-
* உங்கள் தொலைபேசியில் உள்ள வாட்ஸ் அப்பை திறக்கவும்.
* உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள தொடர்பு பட்டியலுக்கு செல்லவும்.
* யாருக்கு நீங்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் செய்ய வேண்டுமோ அவரது தொடர்பை கிளிக் செய்யவும்.
* வாட்ஸ் அப் திரையின் மேல் வாய்ஸ் கால், வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.
* அதில் நீங்கள் வீடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு வீடியோ கால் இணைக்கப்படும்.