பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Vivo புத்தாண்டு சலுகையாக ₹10,000 மதிப்புள்ள மொபைல் போன்களை ₹101 முன்தவணையில் விற்பனை செய்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

₹10,000 பெருமானம் உள்ள Vivo போன்களை வெறும் ₹101 மட்டும் செலுத்தி, அடுத்த 6 தவணைகளில் முழுதொகையினையும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. புத்தாண்டு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் பெற அருகில் உள்ள VIVO அங்காடிகளை அனுகலாம் என தெரிவித்துள்ளது.


இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் Vivo NEX, V11, V11 Pro, Y95, Y83 Pro, மற்றும் Y81-4G ஆகிய மொபைல்களை பெறலாம் எனவும், இந்த சலுகை விற்பனை டிசம்பர் 20 முதல் ஜனவரி 31-வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறவித்துள்ளது.



இந்த சலுகையினை எப்படி பெறுவது...


  • இது ஒரு Offline சலுகை விற்பனை என்பதால், அருகில் உள்ள Vivo-BFL பங்குதாரர் கடைகளுக்கு செல்லவும்.

  • PAN அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு KYC ஆவணத்தனை சமர்பிக்க வேண்டும்.

  • ₹10,000 அல்லது அதற்கு மேல் உள்ள ஒரு மொபைலினை தேர்வு செய்யவும்.

  • ₹101கட்டணம் முன்பனமாக செலுத்தி மொபைலினை பெற்ற செல்லுவும். மீதமுள்ள தொகையினை 6 சரிசம தொகையாக பணம் (அ) பற்று, கடண் அட்டைகள் மூலம் செலுத்த வேண்டும்.


கூடுதல் சலுகை...


  • HDFC கடண் அட்டை மூலம் பணம் செலுத்தும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 0% வட்டி மற்றும் 5% பணம் திரும்ப பெறுவர்.


குறிப்பு: பெறப்படும் மொபைல் ஆனது Bajaj Finance Ltd தொடர்புகொண்ட பங்குதாரர்களின் அங்காடிகளில் வாங்குதல் அவசியம் ஆகும். சாதராண EMI முறைமைகளுக்கு இந்த சலுகை பொறுந்தாது.