புதுடெல்லி: பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ வாடிக்கையாளர்களை கவர சிறப்பு சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ், ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உடைந்தால், நிறுவனம் அதை இலவசமாக மாற்றித்தரும் (Free Screen Replacement). இது மட்டுமல்லாமல், ரூ .10 ஆயிரம் வரையிலான பல நன்மைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஸ்பிளே இலவசமாக மாற்றப்படும்


ஊடக அறிக்கைகளின்படி, நிறுவனம் இந்த சலுகையை Vivo X60, Vivo V21 மற்றும் Vivo Y தொடர்களில் வழங்குகிறது. இந்த சலுகைகள் ஆகஸ்ட் 11 முதல் தொடங்கி ஆகஸ்ட் 23 வரை நீடிக்கும். இந்த காலத்தில், ​​பயனர்கள் அமேசான்-பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இருந்து ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். இதில் பயனர்களுக்கு கார்டு சலுகைகள், EMI சலுகைகள், ஒன் டைம் ஸ்க்ரீன் ரீப்லேஸ்மெண்ட், இலவச லேப்டாப் பேக் பேக், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் போன்ற சிறந்த சலுகைகள் கிடைக்கும்.


இந்த ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி


Vivo X60, Vivo V21 மற்றும் Vivo Y சீரிஸில், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ (ICICI) மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் டிரிபிள் ஜீரோ இஎம்ஐ திட்டத்தின் கீழ் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படும்.


ALSO READ: Vivo Y73:குறைந்த விலையில் கிடைக்கிறது விவோ போன், விவரம் இதோ


மேலும், 6 மாதங்களுக்கு Vivo X60, Vivo V21 மற்றும் Vivo Y சீரிஸில் ஒரு முறை இலவசமாக பழுதடைந்த டிஸ்பிளே மாற்றிக் கொடுக்கப்படும். இந்த தொலைபேசிகளை நோ காஸ்ட் இஎம்ஐ-யில் வாங்கலாம். இதனுடன், 10,000 ரூபாய்க்கான நன்மைகளும் வழங்கப்படுகின்றன.


6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும்


நிறுவனத்தின் கூற்றுப்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், புதிய விவோ போன்களை (Vivo Phones) வாங்கும்போது, ​​பயனர்களுக்கு உறுதியாக பரிசுகள் கிடைக்கும். இந்த தொலைபேசிகளுடன் இலவசமாக ஒரு பேக்பேக்கும் வழங்கப்படும்.


இந்த பயனைப் பெற, 15,000 ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர் பொருட்களை வாங்கி இருக்க வேண்டும். மேலும், 15,000 ரூபாய்க்கு கீழ் பொருட்களை வாங்கினால், 6 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் வழங்கப்படும். நீட்டிக்கப்பட்ட உத்தரவாத சலுகை ஆகஸ்ட் 25 வரை உள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் விவோவின் மெயின்லைன் சேனல்கள் மூலம் கிடைக்கின்றன.


ALSO READ: Vivo Y73:குறைந்த விலையில் கிடைக்கிறது விவோ போன், விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR