Senior Citizens: இந்த சிறப்பு திட்டங்களால் மூத்த குடிமக்களுக்கு பம்பர் வரவு, விவரம் இதோ

வைப்புத்தொகையின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதற்கு மத்தியில், சிறப்பு எஃப்டிகள் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்திற்கான சிறந்த ஆதாரமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 06:09 PM IST
Senior Citizens: இந்த சிறப்பு திட்டங்களால் மூத்த குடிமக்களுக்கு பம்பர் வரவு, விவரம் இதோ title=

SBI, BoB, ICICI, HDFC Bank Special FDs for senior citizens: மூத்த குடிமக்களுக்கான பல பாதுகாப்பான மற்றும் நிலையான வருவாய்க்கான நல்ல வழிகளை வங்கிகளின் நிலையான வைப்புகள் (Fixed Deposit) அளிக்கின்றன. பல பெரிய வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வைப்புத்தொகைக்கு அதிக வட்டியை வழங்குகின்றன.

இந்திய ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி (HDFC Bank), ICICI வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) ஆகியவை மூத்த குடிமக்களுக்கு சிறப்பான எஃப்டி திட்டங்களை வழங்குகின்றன. இவற்றில், ஐசிஐசிஐ வங்கி தவிர, மூன்று வங்கிகளிலும் இந்தத் திட்டத்தின் காலக்கெடு 30 செப்டம்பர் 2021 ஆகும். ICICI வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD க்கான காலக்கெடுவை 7 அக்டோபர் 2021 வரை நீட்டித்துள்ளது.

வைப்புத்தொகையின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதற்கு மத்தியில், சிறப்பு எஃப்டிகள் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்திற்கான சிறந்த ஆதாரமாகும். இந்த வங்கிகளின் திட்டங்களையும் அவற்றின் விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

SBI-யின் சிறப்பு எஃப்டி திட்டம்

SBI-யின் சிறப்பு எஃப்டி திட்டமான ’வி கேர்' (We Care) திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 5 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு 0.30 சதவிகிதம் அதிக வட்டி கிடைக்கும். எஸ்பிஐ தற்போது 5 வருட எஃப்டி மீது 5.4% வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் சிறப்பு எஃப்டி திட்டத்தில் (We Care) டெபாசிட் செய்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு 6.20 சதவிகிதம் வட்டி கிடைக்கும். வீ கேர் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டியோடு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்கும்.

ALSO READ: Yes Bank vs SBI: மிகச்சிறந்த வட்டியை அளிக்கும் வங்கி எது?

HDFC வங்கியின் சிறப்பு FD திட்டம்

எச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு அதன் எச்டிஎஃப்சி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி திட்டத்தில் 0.75 சதவிகிதம் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் எச்டிஎப்சி வங்கியில் ஒரு மூத்த குடிமகன் டெபாசிட் செய்தால், அவருக்கு 6.25 சதவிகிதம் எஃப்.டி கிடைக்கும். சாதாரண மக்கள் 5 வருட FD க்கு 5.50 சதவீத வட்டி பெறுகிறார்கள். இதில், மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் 0.50 சதவிகிதம் மற்றும் சிறப்புத் திட்டத்தில் 0.25 சதவிகிதம் என மொத்தம் 0.75 சதவிகிதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.

ICICI வங்கியின் சிறப்பு எஃப்டி திட்டம்

ICICI வங்கியின் சிறப்பு FD திட்டமான ICICI வங்கி கோல்டன் இயர்ஸ் FD திட்டத்தில் (ICICI Bank Golden Years FD scheme), மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும். இதில், வங்கி 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு, மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.30 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வங்கியில், பொது மக்கள் 5 ஆண்டுகளுக்கு மேலான வைப்புத்தொகைக்கு 5.50 சதவீத வட்டி பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்தால், மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் 0.50 சதவிகிதம் வட்டியோடு,  0.30 சதவீதம் கூடுதல் வட்டியும் கிடைக்கும்.

BoB இன் சிறப்பு FD திட்டம்

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தில் வைப்புத்தொகைக்கு 1.0 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமகக்கள் சிறப்பு FD திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கும். 5 வருடங்களுக்கும் மேலான FD-களுக்கு பொது மக்களுக்கு 5.25 சதவிகித வட்டியை வங்கி வழங்குகிறது.

ALSO READ: Personal Loan வரம்பை அதிகரித்தது ரிசர்வ் வங்கி: யாருக்கெல்லாம் அதிக கடன் கிடைக்கும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News