ஸ்மார்ட்போன் பிராண்ட் விவோ அண்மையில் இந்தியாவில் T2 5G சீரிஸை அறிமுகப்படுத்தியது. இப்போது ஏப்ரல் 18 செவ்வாய்கிழமை முதல் முறையாக Vivo T2 5G-ஐ விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மொபைலை வாங்க விரும்புபவர்கள் பிரபல ஆன்லைன் தளமான Flipkart வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vivo-வின் 64MP கேமரா மொபைல்


பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் விவோ சமீபத்தில் இந்தியாவில் T2 5G சீரிஸை அறிமுகப்படுத்தியது. இப்போது ஏப்ரல் 18 அன்று, முதல் முறையாக Vivo T2 5G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது. நீங்கள் விவோ T2 5G ஸ்மார்ட்போனை Flipkart மற்றும் Vivo India இணையதளத்தில் வாங்கலாம். இந்த போன் ஏப்ரல் 18, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு விற்பனை செய்யப்படும். நீங்கள் Vivo T2 5G ஐ மலிவாக வாங்க விரும்பினால், ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் விற்பனையாக இருப்பதால், விவோ T2 5G ஸ்மார்ட்போனுக்கு சிறந்த சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.


மேலும் படிக்க | கூகுள் பிளேஸ்டாரில் ஆபத்தான மால்வேர்: ஆபத்தில் ஆண்ட்ராய்டு போன்கள்


Vivo T2 விலை


இந்த தொலைபேசியை 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ T2-ன் 6ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999 ஆகவும், 8ஜிபி போனின் விலை ரூ.20,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் நைட்ரோ பிளேஸ் மற்றும் வெலாசிட்டி வேவ் கலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Vivo T2 5Gயின் முதல் விற்பனை தள்ளுபடி 


Flipkart மூலம் ஸ்மார்ட்போனை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் HDFC, SBI மற்றும் ICICI வங்கிகளில் 1500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, இந்த போனை 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI விருப்பத்துடன் வாங்கலாம்.


Vivo T2 5G அம்சங்கள்


விவோ T2 5G என்பது பட்ஜெட் பிரிவில் மிக மெலிதான, இலகுரக ஃபோன் ஆகும், இது புதிய வண்ண முறை மற்றும் அழகான வடிவமைப்புடன் வருகிறது. Vivo T2 5G மென்மையான மற்றும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்க ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. T2 5G ஆனது OIS ஆதரவுடன் 64MP முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கான 16எம்பி ஹெச்டி முன்பக்க கேமராவை இந்த போனில் கொண்டுள்ளது. Vivo T2 5G மைக்ரோ மூவி பயன்முறையுடன் வருகிறது மற்றும் 6 உள்ளமைக்கப்பட்ட vlog டெம்ப்ளேட்களை கொண்டிருக்கிறது. Vivo T2 5G ஆனது 44W FlashCharge தொழில்நுட்பத்துடன் ஒரு நாள் முழுவதும் உபயோகிக்கும் வகையில் 4500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | Elon Musk: ரகசியமாக AI நிறுவனத்தை உருவாக்கிய எலோன் மஸ்க்..! சாட்ஜிபிடி கலக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ