போனை ரீசார்ஜ் செய்தால் ரூ.2400 கேஷ்பேக் கிடைக்கும்!
ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2,400 ரூபாய் காஷ்பேக் ஆஃபரை வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வோடபோன்-ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்ளை ஈர்க்கும் நோக்கில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 2ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும். நாடு முழுவதும் இருக்கும் ஸ்மார்ட்போன் யூசர்கள் 5ஜி சேவையை நோக்கி நகரும் நிலையில், 2ஜியை பயன்படுத்தும் பயனர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். 2ஜி பயனர்கள் 4ஜிக்கு மாற்றப்பட வேண்டும் என்பதற்காக, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற சலுகைகளை கொண்டு வருகின்றன.
வோடபோன்-ஐடியாவும் இதேபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. டெலிகாம்டாக் அறிக்கையின்படி, ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் ரூ.2400 காஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை 2ஜி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. கேஷ்பேக்கிற்கு, இந்த 2ஜி பயனர்கள் 4ஜி மொபைல்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். மாதம் ரூ.100 கேஷ்பேக் வழங்குவதன் மூலம், 2ஜி பயனர்களை 4ஜி போன்களுக்கு மாறுவார்கள் என வோடாபோன் ஐடியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Retired Apps: அண்மையில் சேவை வழங்குவதை நிறுத்திய சேவைகள்
ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும். இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், 2ஜி மொபைலில் இருந்து நீங்கள் 4ஜி மொபைலுக்கு மாற வேண்டும். அப்போது, உங்களின் சிம் கார்டுக்கு வோடோஃபோன் ஐடியாவில் இருந்து மெசேஜ் வரும். தொடர்ந்து 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.100 கேஷ்பேக் பெற ரூ.299 திட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட வரம்பற்ற பேக் மூலம் ரீசார்ஜ் செய்யுங்கள். 24 மாதங்களுக்கு ரீச்சார்ஜ் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு இந்த 2400 ரூபாய் காஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR