தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். BSNL நிறுவனமும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக தனியார் நிறுவனங்களும் பல திட்டங்களை (Mobile Recharge Plans) அறிவித்து வருகின்றன. எனினும், அவை சில சமயங்களில் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது ஷாக் கொடுக்கின்றன. கட்டணத்தை உயர்த்தாமல், வேலிடிட்டியை குறைத்து, சத்தமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன.


சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது இரு திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. வோடபோன் ஐடியாவின் (Vi) பயனர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும், நிறுவனம் இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. அவை ரூ.479 மற்றும் ரூ.666 என்ற கட்டணத்தில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள். 


ஜூலை 2024 இல் கட்டணங்களை உயர்த்திய பிறகு நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் சிலவற்றை மாற்றி அமைத்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும் வரையறுக்கப்பட்ட டேட்டா கிடைக்கும். இந்த திட்டங்களின் வேலிட்டிட்டியை தவிர, மற்ற சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இண்டெர்நெட் கனெக்‌ஷன் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்யலாம் தெரியுமா? சுலபம் தான்...


வோடபோன் ரூ.479 ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs.479 Plan)


வோடபோன் ஐடியாவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் முன்பு 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது அது 48 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியாவின் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.


வோடபோன் ரூ.666 ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs.666 Plan)


மறுபுறம், ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 77 நாட்களுக்குப் பதிலாக 64 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டதாக இருக்கும். ரூ.666 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இது தவிர, Vi Hero நன்மைகளின் கீழ், பயனர்கள் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delight போன்ற அம்சங்களையும் பெறுவார்கள்.


மேலே குறிப்பிட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியை குறைப்பதன் மூலம், வோடஃபோன் ஐடியா மொத்த வருவாய் மற்றும் ஒரு பயனரிடம் இருந்து சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க விரும்புவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வோடபோன் ஐடியாவைத் தவிர, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் தங்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அவர்களது பயனர்கள் பலர் BSNL-ஐ தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்! ரூ.15000க்குள் சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ