வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி
பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல்லுக்குப் (Airtel) பிறகு, வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் உலுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களிலும் 25 சதவீதம் வரை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் நவம்பர் 25 முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக திங்களன்று, ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது.
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா (Vodafone Idea) செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, புதிய திட்டங்கள் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) மேம்படுத்தும் செயல்முறையைத் தொடங்கும் மற்றும் தொழில்துறை நிதி அழுத்தத்திலிருந்து வெளியே வர உதவும் என்று கூறியது. வோடபோன் ஐடியா தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கடந்த வாரம் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஏர்டெல் (Airtel) நிறுவனம் கட்டண உயர்வை அறிவித்த ஒரு நாள் கழித்து, வோடபோன் ஐடியாவும் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது.
ALSO READ | ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்வு; புதிய ரேட் என்ன?
சமீபத்தில், Bernstein அறிக்கை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று கூறியது. முன்னதாக, நிறுவனங்கள் 2019 டிசம்பரில் 25 முதல் 30 சதவீதம் வரை கட்டணங்களை அதிகரித்தன. இதற்குப் பிறகு, நிறுவனங்கள் திட்டங்களில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்தன. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை ரூ.49 லிருந்து ரூ.79 ஆக உயர்த்தியது. ஒரு பயனருக்கு சராசரி வருவாய் அதிகரிப்பு (ARPU) தொலைத்தொடர்பு துறைக்கு மிகவும் முக்கியமானது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜியோவின் ARPU ரூ.143.60 ஆகவும், வோடபோன் ஐடியாவின் ARPU ரூ.109 ஆகவும், ஏர்டெல் ரூ.153 ஆகவும் இருந்தது.
எனவே பிரீபெய்டு கட்டணங்களை (Prepaid Plans) 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள், நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR