ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்வு; புதிய ரேட் என்ன?

ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 09:32 AM IST
ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்வு; புதிய ரேட் என்ன? title=

மொபைல் சேவை வழங்குநரான பார்தி ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதங்களில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஏர்டெல் அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் நவம்பர் 26 முதல் அமலுக்கு வரும்.

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பணவீக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி நிறுவனம் 25% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக ஜூலையில், நிறுவனம் போஸ்ட்பெய்டு திட்டத்தின் விலையையும் அதிகரித்தது.

ALSO READ | Airtel மற்றும் Vi பிரமாண்டமான திட்டம், முழு விவரம் இதோ 

தற்போது ஏர்டெல்லின் 28 நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.99 முதல் தொடங்கும். அதாவது, இந்த திட்டத்தில் 25% அதிகரித்துள்ளது. நிறுவனம் ஜூலை மாதம் ரூ.49 திட்டத்தை நீக்கியது. இருப்பினும், இந்த திட்டம் SMS வழங்கப்படாது.

உங்களுக்கும் எஸ்எம்எஸ் சேவை வேண்டுமானால், ரூ.149க்கு பதில் ரூ.179 செலவழிக்க வேண்டும். அதன்படி இந்த திட்டத்தில் 20% உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.219 திட்டம் தற்போது ரூ.265 ஆக உயர்ந்துள்ளது அதன்படி இதில் 1ஜிபி டேட்டாவு கூடுதலாக வருகிறது.

அதேபோல் ஏர்டெல்லின் பிரபலமான ரூ.598 திட்டத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் தினசரி பயனர்களுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்திற்கு நீங்கள் ரூ.719 செலவழிக்க வேண்டும். டேட்டா டாப்அப் மற்றும் பிற திட்டங்களின் கட்டணத்தில் 20% உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த ப்ரீபெய்டு திட்டங்களின் புதிய விலை நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும். Reliance Jio மற்றும் Vodafone இன்னும் விலை உயர்வை அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை விரைவில் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News