5ஜி ரேஸில் குதித்த வோடபோன் ஐடியா - ஜியோ, ஏர்டெல் ஆதிக்கத்துக்கு என்டு கார்டு..!
vodafone idea enters 5g race: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ஆதிக்கத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க சூப்பர் பிளானோடு வர இருகிறது வோடபோன் ஐடியா.
vodafone idea enters 5g race: இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) அடுத்த 6-7 மாதங்களில் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந் நிறுவனம் தற்போது மும்பை, புனே மற்றும் டெல்லியில் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்து வருகிறது. Vi தனது 3ஜி சேவைகளை நிறுத்திவிட்டு, 4ஜி கவரேஜை மேம்படுத்தப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
வோடபோன் ஐடியா தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் மூண்டா கூறுகையில், " தங்களது நிறுவனம் 5ஜி உள்கட்டமைப்புக்காக vRAN மற்றும் ORAN போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக தங்களின் தொழில்பார்ட்னர்களுடன் அந்த வேலையை தொடங்கிவிட்டோம்." என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், VI நிறுவனம் மட்டும்தான் இந்த நாட்டில் இழப்பில் இயங்கும் ஒரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் என்று கூறினார்.
2024 இறுதிக்குள் Vi 5G சேவை
வோட போன் ஐடியா 2024-ன் இறுதிக்குள் தனது 5G சேவைகளைத் தொடங்கும். இந்தியா முழுவதும் 17 வட்டங்களில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது வோடபோன் ஐடியா. இதில் ஆந்திரப் பிரதேசம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் (கிழக்கு), உத்தரப் பிரதேசம் (மேற்கு), மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும். மும்பை மற்றும் புனேயில் சில பயனர்கள் ஏற்கனவே Vi 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்த முடியும். இது Vi வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
வோடபோன் ஐடியா 5ஜி திட்டம்
Jio மற்றும் Airtel-ஐ விட 5G-ல் வோடபோன் ஐடியா பின்தங்கியிருந்தாலும், ப்ரீப்பெய்ட் பிளானில் யூசர்களுக்கு குறைந்த விலையில் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. டெலிகோ நிறுவனம் சமீபத்தில் Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar சந்தாக்கள் உடன் இரண்டு புதிய ஆண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை Jio மற்றும் Airtel திட்டங்களை விட குறைவான விலை கொண்டது. Vi தற்போது இந்தியாவில் 228 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஏனெனில் பயனர்கள் தங்கள் இணைப்புகளைப் போர்ட் செய்து ஆபரேட்டர்களைத் மாற்றி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ