புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநில அரசு வித்தியாசமான முன்முயற்சியை எடுத்துள்ளது. மாநில காவல்துறையும், அரசும் இணைந்து எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவறான விஷயங்களுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் முன்முயற்சி இது. 


இணையத்தை பயன்படுத்தி பல தவறுகளும் மோசடிகளும் நடப்பது அனைவருக்கும் தலைவலியாக மாறிவிட்டது. சைபர் கிரைம் என்ற ஒரு பிரிவு கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது என்றாலும், அதற்கு முன்னதாக ஏற்படும் சேதங்களை சரி செய்வது மிகவும் சிக்கலானது.


Also Read | நிதி மோசடிகளை தவிர்க்க 'Digital Intelligence' பிரிவை அமைக்க அரசு திட்டம்!!


பல விஷயங்களில் பிரச்சனை சரியான பிறகும், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் தீர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது.


தற்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adhithyanath) தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளின்படி, ஒருவர் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை (pornographic) தேடினால், அந்த நபரின் விவரங்கள் காவல்துறைக்கு நேரடியாக சென்றுவிடும். 



இது பிரச்சனையின் ஆணிவேரையே சரி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆபாச தகவல் தேடும் நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறைக்கு தெரிந்துவிடும்.  உடனே, 1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்.எம்.எஸ் (SMS) வரும்.


Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral


இந்த நடவடிக்கை, மனோரீதியாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். தங்கள் தவறு வெளியில் தெரியாது என்பதாலே தான் பலர் இணையக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என உத்தரபிரதேச மாநில காவல்துறை கூறுகிறது.


’டிஜிட்டல் சக்ரவாயு’ (Digital Chakravayu) என்ற திட்டத்தின் மூலம், பெண்களுக்கான (Women) டிஜிட்டல் ரோட்மேப்பையும் (Digital Roadmap) உத்தரப்பிரதேச அரசு உருவாக்கியுள்ளது. முதலில் 6 மாவட்டங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR