ஜோராக விற்பனையாகும் போலி iPhone, போலியை கண்டறிய tips கொடுத்த Apple
சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்படும் போலி ஐபோன்கள் குறித்து ஆராய Apple ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் போலி ஐபோன்கள் மற்றும் மொபைல் பாகங்களை விற்பனை செய்பவர்கள் மீது இந்த குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி: பெரும்பாலான மக்கள் Apple-ன் iPhone-ஐ மலிவான விலையில் வாங்க விரும்புகிறார்கள். மக்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, பல சமூக ஊடக தளங்களில் iPhone-கள் பத்து மடங்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஆனால் இப்போது தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இதுபோன்ற போலி iPhone-களை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி iPhone-ஐ வாங்கி ஏமாறாமல் இருக்க, அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை இங்கே காணலாம்.
இன்ஸ்டாகிராமில் கள்ளத்தனமாக iPhone-கள் கண்மூடித்தனமாக விற்பனை செய்யப்படுகின்றன
இன்ஸ்டாகிராம் (Instagram) என்ற சமூக தளத்தில் போலி iPhone-கள் மற்றும் பிற பாகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போலி iPhone-கள் மற்றும் பிற தயாரிப்புகளை விற்கும் பணி உலகம் முழுவதும் படு வேகமாக நடந்து வருகிறது.
Apple தயாரிப்புகள் 10 மடங்கு மலிவான விலையில் கிடைக்கின்றன
சமீபத்தில் தான் வைத்திருந்த iPhone-னின் சார்ஜர் திடீரென வெடித்ததாகவும், பல சமூகத் தளங்களில் இந்நாட்களில் Apple நிறுவனத்தின் போலி தயாரிப்புகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுகின்றன என்றும் இது குறித்து ஆய்வு செய்த சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஆந்த்ரே ஸ்ட்ரோபா கூறினார். அவற்றின் விலை அசல் தயாரிப்புகளை விட பத்து மடங்கு குறைவாக உள்ளது.
ALSO READ: Junior Instagram: 13 வயதை விட குறைவான குழந்தைகளுக்காக வருகிறது புதிய தளம்
Apple எச்சரிக்கை விடுத்துள்ளது
சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்படும் போலி ஐபோன்கள் குறித்து ஆராய Apple ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் போலி ஐபோன்கள் மற்றும் மொபைல் பாகங்களை விற்பனை செய்பவர்கள் மீது இந்த குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தவிர, இதுபோன்ற போலி நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு நிறுவனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
உண்மையான Apple பாகங்களை எவ்வாறு அடையாளம் காண்பது
Apple-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து உங்கள் தயாரிப்பின் வரிசை எண்ணை நீங்கள் எப்போதும் கிராஸ் செக் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தவிர, உண்மையான IEMI எண்ணின் உதவியுடனும் உண்மையான தயாரிப்புகளும் பொருட்களும் அடையாளம் காணப்படும்.
ALSO READ: Twitter பயனர்களுக்கு எச்சரிக்கை; போலி செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR