Free Repair: Apple-ன் இந்த 2 products-ல் பிரச்சனையா? இலவசமாக பழுதுபார்த்துக் கொள்ளலாம்

சமீபத்தில் Apple-ன் இரண்டு கேட்ஜெட்டுகளில் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, Apple நிறுவனம் இந்த தயாரிப்புகளை இலவசமாக சரிசெய்யப் போவதாகத் தெரிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2021, 12:33 PM IST
  • வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை அளித்தது Apple நிறுவனம்.
  • Apple Watch Series 5 மற்றும் Apple Watch SE ஆகியவை இலவசமாக பழுதுபார்க்கப்படும்.
  • MacBook Pro Series-ன் சில லேப்டாப்களின் பேட்டரி இலவசமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Free Repair: Apple-ன் இந்த 2 products-ல் பிரச்சனையா? இலவசமாக பழுதுபார்த்துக் கொள்ளலாம் title=

புதுடில்லி: தொழில்நுட்ப நிறுவனமான Apple எப்போதும் தரமான தயாரிப்புகளை தயாரிப்பதில் பிரபலமானது. ஆனால் பல முறை Apple தயாரிப்புகளிலும் பல புகார்கள் வருகின்றன. சமீபத்தில் Apple-ன் இரண்டு கேட்ஜெட்டுகளில் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, Apple நிறுவனம் இந்த தயாரிப்புகளை இலவசமாக சரிசெய்யப் போவதாகத் தெரிகிறது.

Apple Watch Series 5 மற்றும் Apple Watch SE எதிர்கொள்ளும் சிக்கல்கள்

Apple Watch Series 5 மற்றும் Apple Watch SE ஆகியவற்றில் சில நேரம் ரீசார்ஜ் செய்யும்போது சிரமங்களை எதிரொள்ள வேண்டியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களில் பிழைகளை சரிசெய்ய watchOS7.3.1 புதுப்பிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி இந்த ஆப்பிள் வாட்ச் சார்ஜ் ஆகவில்லை என்றால், நிறுவனம் இப்போது அவற்றை சரிசெய்து கொடுக்கும். Apple Watch Series 5 மற்றும் Apple Watch SE ஆகியவை இலவசமாக பழுதுபார்க்கப்படும் என்று நிறுவனம் சமீபத்தில் ஒரு செய்திக்குறிப்பின் மூலம் கூறியது.

MacBookPro லேப்டாப் பேட்டரி மாற்றப்படும்

இதற்கிடையில், Apple தனது மடிக்கணினி (Laptop) பழுதுபார்ப்பு குறித்து உலகளவிலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MacBook Pro-வின் சில மாடல்களில் பேட்டரி இலவசமாக மாற்றப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட MacBook Pro-வின் சில மாடல்களுக்கு தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சில தொடர்களின் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இந்த மடிக்கணினிகளில் புதிய பேட்டரி பொருத்தப்பட்டு அவை திருப்பித் தரப்படும். இதற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த கட்டணத்தையும் வசூலிக்காது.

ALSO READ: கசிந்த Redmi Note 10 தொடரின் பெரிய விவரங்கள், இந்தியாவில் எப்போது ரிலீஸ்!

MacBook Pro Series பட்டியல்

Apple வெளியிட்டுள்ள அறிக்கையில், MacBook Pro Series-ன் இந்த லேப்டாப்களின் பேட்டரி மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

MacBook Pro (13-inch, 2016, Two Thunderbolt 3 Ports)

MacBook Pro (13-inch, 2017, Two Thunderbolt 3 Ports)

MacBook Pro (13-inch, 2016, Four Thunderbolt 3 Ports)

MacBook Pro (13-inch, 2017, Four Thunderbolt 3 Ports)

MacBook Pro (15-inch, 2016)

MacBook Pro (15-inch, 2017)

மேலே குறிப்பிட்ட மாடல்களின் லேப்டாப்களை வைத்திருப்பது மட்டும் பேட்டரி (Battery) மாற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்காது. வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் MacBook-கின் பேட்டரி நிலைகளை சரிபார்க்க வேண்டும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சரிபார்க்கும் போது ‘சேவை பரிந்துரைக்கப்படுகிறது’ (Service Recommended) என்ற செய்தி பாப் அப் வந்தால் மட்டுமே நிறுவனம் பேட்டரியை இலவசமாக மாற்றிக்கொடுக்கும்.

ALSO READ: Cheap Recharge plans: Rs.100-ல் 12 GB தரவு மற்றும் 90 நாட்கள் இலவச அழைப்பு வசதி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News