உலகக் கோப்பையை இலவசமா பாருங்க - அதுவும் குறைவான டேட்டாவில்... இப்போ புது வசதியும் வந்துருக்கு!
ICC World Cup 2023 Free Streaming: ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளை மொபைலில் இலவசமாகவும், குறைந்த டேட்டாவில் நீங்கள் பார்க்கலாம். தற்போது ஹாட்ஸ்டார் தளம் புதிய வசதியையும் கொண்டு வந்துள்ளது.
ICC World Cup 2023 Free Streaming: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் நாளை (அக். 5) முதல் தொடங்க உள்ளது. இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கேதசம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என 10 அணிகள் இதில் விளையாடுகின்றன. அடுத்த 45 நாள்களுக்கு இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.
இலவசமாக பார்ப்பது எப்படி?
இந்தியாவில் நடப்பதால் பல ரசிகர்கள் டிக்கெட் எடுத்து மைதானத்திற்கு நேரில் சென்று போட்டியை காண வேண்டும் என விரும்புவார்கள். பொருளாதார ரீதியாகவும், பணிச்சுமை, நேரமின்மை காரணமாக பலரும் போட்டிகளை தொலைக்காட்சி / மொபைலில்தான் பார்ப்பார்கள். ஆக்ஷன் ரீப்ளே, பல மொழிகளில் வர்ணனை, சிறந்த கிராபிக்ஸ் விளக்கம் மற்றும் பந்துக்கு பந்து போட்டி குறித்து அலசி ஆராய்வது என நேரலையில் போட்டியை காண்பதும் தனி அனுபவம்தான்.
இந்த உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) சிறப்பான விஷயம் என்னவென்றால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) முழு தொடரையும் இலவசமாக வழங்குகிறது. அதாவது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியை உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து நீங்கள் இலவசமாக (Hotstar Free Streaming) மொபைலில் காணலாம். கேபிள் தொலைக்காட்சி என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலையும் ட்யூன் செய்து நேரலையை பல மொழிகளில் நீங்கள் ரசிக்கலாம். தொலைக்காட்சியிலேயே ஹாட்ஸ்டாரில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கென நீங்கள் சந்தா கட்ட வேண்டும் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
ஹாட்ஸ்டார் வழங்கும் அசத்தல் வசதி
ஹாட்ஸ்டார் தளம் தற்போது ஒரு புதிய வசதியை உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கம்போல் கிடைமட்டமாக (Horizontal Mode) மட்டுமின்றி செங்குத்தாகவும் (Vertical Mode) இனி நீங்கள் கிரிக்கெட் போட்டியை ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம். இதற்கு ஹாட்ஸ்டார் மேக்ஸ்வியூ (MaxView) என பெயரிட்டுள்ளது. அந்த ஆப்ஷன் உங்கள் திரையில் தெரியும், அதை தேர்வு செய்து அந்த வகையில் நீங்கள் போட்டியை காணலாம். இந்த வசதியை வழங்கும் முதல் ஓடிடி தளம், ஹாட்ஸ்டார்தான். இந்த வசதியையும் நீங்கள் இலவசமாகவே பெறலாம்.
மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!
ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐசிசி நிறுவனத்துடன் கைக்கோர்த்து போட்டியை செங்குத்தாக ஒளிப்பரப்பும் வசதியை கொண்டு வந்துள்ளது. அதற்கான பிரத்யேக ஸ்கார்ட்கார்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களின் ஆட்டத்தை இன்னும் நுணுக்கமாக காண்பதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. ஒரே போட்டியின் இரண்டு வெவ்வேறு காட்சிகளை காணும் வகையில், அனுபவிக்க பயனர்களுக்கு Split View வசதியையும் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா குறைவாகவே செலவாகும்
மேலும், ஹாட்ஸ்டாரில் இலவசமாக உலகக் கோப்பை போட்டிகளை காணும் ரசிகர்களுக்கு டேட்டா குறைவாக செலவாகும். ஏனென்றால், இலவசமாக பார்ப்பவர்களுக்கு ஹாட்ஸ்டார் போட்டியை உச்சபட்சமாக 480p ஃபார்மட்டில்தான் ஒளிபரப்பும். எனவே, நீங்கள் 50+50 ஓவர்களை முழுமையாக பார்த்தாலும் மற்ற தளங்களை விடவும், வழக்கத்தை விடவும் குறைவாகவே டேட்டா செலவாகும் (Low Data Usage). சந்தா செலுத்தி ஹாட்ஸ்டாரில் பார்க்கும் ரசிகர்களுக்கு போட்டி 1080p ஃபார்மட்டில் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். ட
ஹாட்ஸ்டாரில் இரண்டு வெவ்வேறு சந்தா திட்டங்கள் உள்ளன. அதன் சூப்பர் பிளானின் விலை ஆண்டுக்கு ரூ.899 ஆகும். பிரீமியம் திட்டத்தின் விலை ரூ.1,499 ஆகும். இது 4K தெளிவுத்திறன் ஸ்ட்ரீமிங்குடன் விளம்பரமில்லா அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.
மேலும் படிக்க | அக்டோபர் மாதம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ