வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்வோரின் பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிமுறைகளும் விதிக்கப்படுகின்றன. அதன்படி, ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், செருப்பு அணிந்து கொண்டு இருச்சக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செருப்பு அணிந்தால் அபராதம்


இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்தியாவில் வாகனம் ஓட்டும் அனைவரும் சரியான உடைகளையும், காலணிகளையும் அணிந்திருக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. குறிப்பாக, இருச்சக்கர வாகனம் ஓட்டும்போது சாதாரண செருப்பு அணிந்து கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. மூடிய காலணிகளைக் அணிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 


மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்


செல்போன் பயன்படுத்தலாம்


பொதுவாக சாலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்று கூறப்படுவதுண்டு. சாலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் கவனக்குறைவு ஏற்பட்டு, விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் அநாவசியமாக செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது வழி கேட்பதற்காக செல்போனை பயன்படுத்தலாம். அதனைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக செல்போனை பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.  


ஓட்டுநர் உரிமங்கள்


யாரும் இரண்டு ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருக்கக்கூடாது. ஒருவர் இரண்டு ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் நிச்சயம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். சட்டப்படி குற்றம். ஒருவேளை உங்களிடம் இரண்டு ஓட்டுநர் உரிமங்கள் இருந்தால் அதனை ரத்து செய்துவிடுங்கள்.


ஆம்புலன்ஸூக்கு வழி


அவசரத் தேவைகளுக்காக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு சாலையில் செல்வோர் கட்டாயம் வழிவிட வேண்டும். இது ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு ஆகும். அந்த வாகனங்களின் பாதையை யாரேனும் தடுத்தால் அல்லது குறுக்கீடு செய்வது கண்டறியப்பட்டால் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, காவல்துறை வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அவசர தேவை வாகனங்கள் பட்டியலில் அடங்கும். 


தகுதியற்ற ஓட்டுநர்கள் 


குடிபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. அவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.1,000 அபராதமும், இரண்டாவது முறை ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படும்


மேலும் படிக்க | Luxury and Technology Car: ஹூண்டாய் டக்ஸன் கார் அறிமுகமானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ