சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நி.மி., வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும்.


இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் முழு சூரிய கிரகணம் நாளை ஆகஸ்டு 21-ம் தேதி தோன்றுகிறது.


புவிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு பயணிக்கும் போது, சூரிய ஒளியை முழுவதுமாக நிலவு மறைத்துக் கொண்டால் முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 


அந்த சமயம் நிலவு தனது நிழலை புவியில் விழச் செய்யும். நடுக்கோளப் பகுதியில் வசிப்பவர்கள் சூரிய கிரகணத்தை அற்புதமாக கண்டு களிக்கலாம். இந்த கிரகணம் 2 நிமிடங்கள் 40 விநாடிகளுக்கு மேல் நீடிக்கும். 


பகுதி சூரிய கிரகணத்தை புவிக் கோளத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் காணலாம். பெரும்பாலும் மேகக்கூட்டங்கள் சூரிய கிரகணத்தைக் காண இயலாமல் மறைத்து விடும். அதனால் சூரிய கிரகணத்தை தெளிவாகக் காண, மேகங்கள் அற்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.


அமெரிக்காவில் முழுமையாக காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.