டீசல் கார் அல்லது பெட்ரோல் கார்... எதை இப்போது வாங்கலாம்?
Petrol Cars Or Diesel Cars: தற்போதைய சூழலில் பெட்ரோல் எஞ்சின் உள்ள காரை வாங்கலாமா அல்லது டீசல் எஞ்சின் காரை வாங்கலாமா என்பது பலரின் கேள்வியாக இருக்கும். அதுகுறித்து இங்கு தெளிவாக காணலாம்.
Petrol Cars Or Diesel Cars: பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் இரண்டும் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளன. எனவே, எந்த கார் உங்களுக்கு சிறந்தது என்பதை தீர்மானிப்பது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் தொடர்பான சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம், உங்களுக்கு ஏற்ற முடிவை எட்ட எளிமையாக அமையும். இந்த தொகுப்பில், பெட்ரோல் காரை வாங்கலாமா அல்லது டீசல் காரை வாங்கலாமா என்று நீங்கள் முடிவெடுப்பதற்கு உதவும் 5 விஷயங்களை இங்கு ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதை காணலாம்.
1. விலை மற்றும் பராமரிப்பு
பொதுவாக பெட்ரோல் இன்ஜின்கள் விலை குறைவாக இருக்கும். அவற்றின் பராமரிப்பும் எளிதானது. அதேசமயம் பெட்ரோல் எஞ்சின்களை விட டீசல் என்ஜின்கள் விலை அதிகம். அதன் பராமரிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் பெட்ரோல் எஞ்சின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்களின் விலை அதிகமாக இருக்கிறது.
2. செல்லுபடியாகும் காலம்
பல இடங்களில் பெட்ரோல் கார்கள் 15 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையில் டீசல் கார்களின் பதிவு காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, விலையுயர்ந்த டீசல் காரை வாங்குபவர்கள் பெட்ரோல் கார்களை விட 5 ஆண்டுகள் குறைவாக வைத்திருக்க முடியும்.
மேலும் படிக்க | சென்ற மாதம் எந்த நிறுவனத்தின் கார் அதிக விற்பனை...? பெரிய நிறுவனத்திற்கு சறுக்கல்
3. டீசல் கார்களின் எதிர்காலம்?
டீசல் கார்களின் எதிர்காலம் குறித்து நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் கார் தயாரிப்பை நிறுத்திவிட்டன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி எந்த டீசல் காரையும் விற்பனை செய்வதில்லை. டீசல் வாகனங்கள் தொடர்பான புதிய கொள்கையை அரசு கருத்தில் கொண்டுள்ளது.
4. இழுக்கும் சக்தி
டீசல் என்ஜின்கள் குறைந்த வேகத்தில் அதிக முறுக்கு விசையைக் கொடுக்கின்றன மற்றும் அதிக சுமைகளை இழுக்க முடியும். அதாவது இழுக்கும் சக்தி அதிகம். இது ஆரம்பத்தில் வலுவான முடுக்கத்தை அளிக்கிறது. இருப்பினும், பெட்ரோல் என்ஜின்கள் அதிக வேகத்தில் அதிக சக்தியை உற்பத்தி செய்கின்றன மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது ஆரம்பத்தில் சற்று குறைவாகவே செயல்படுகின்றன.
5. மைலேஜ்
பெட்ரோல் எஞ்சின்களை விட டீசல் என்ஜின்கள் அதிக மைலேஜ் தரும். அதாவது, குறைந்த எரிபொருளில் அதிக பயணம் செய்யலாம். எனவே உங்கள் ஓட்டம் அதிகமாக இருந்தால், அந்த சூழ்நிலையில் டீசல் எஞ்சின் கொண்ட கார் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், குறைவாக ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | வாகனங்களில் நம்பர் பிளேட்... எந்தெந்த கலர்களுக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ