WhatsApp Down: `எழுந்திரு அஞ்சலி... எழுந்திரு` - ட்விட்டரில் குவியும் மீம்ஸ்!
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி முடங்கியிருந்த நிலையில், சுமார் 2 மணிநேரங்களுக்கு பிறகு சீராகியுள்ளது.
இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் இன்று மதியம் 12.30 மணி முதல் முடங்கியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது குழுக்களில் செய்திகளை அனுப்ப முடியவில்லை. மேலும், தனிநபர்களுக்கு அனுப்பப்படும் செய்திகளுக்கு ஒரு டிக் மட்டுமே காட்டப்படுகிறது.
உலகளவில் தங்கள் மெசேஜ்களில் சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் மட்டுமின்றி வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலிகளும் செயலிழந்தன. வாட்ஸ்அப் இயல்பு நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், சமூக ஊடக பயனர்கள், ட்விட்டர், பேஸ்புக்கில் வாட்ஸ்அப் முடக்கம் குறித்து மீம்ஸ்களை போட்டுத் தாக்க ஆரம்பித்துள்ளனர். அனைவருக்கும் வாட்ஸ்அப் செயலிழந்துவிட்டதா என்பதை சரிபார்க்க ட்விட்டருக்கு வந்ததாக பல ட்விட்டர் பயனர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த இரண்டு மணி நேரமாக முடங்கி இருந்த நிலையில், வாட்ஸ்அப் சேவை படிப்படியாக மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் முடங்கியது குறித்து ட்விட்டர் பயனர்கள் வேடிக்கையாக ட்வீட் செய்து வருகின்றனர்.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. "சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. மேலும் விரைவில் அனைவருக்கும் வாட்ஸ்அப்பை மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வாட்ஸ்அப் இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் பயனர்களையும், உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் தினமும் 5 பில்லியனுக்கும் அதிகமான செய்திகள் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ