வாட்ஸ்அப் பயனர்களுக்கு நல்ல செய்தி!! `WhatsApp Message Yourself அம்சம் விரைவில் அறிமுகம்
WhatsApp Message Yourself: வாட்ஸ்அப்பின் புதிய அம்சமான ‘மெசேஜ் யுவர்செல்ஃப்’ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ!!
வாட்ஸ்அப் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம்: வாட்ஸ்அப் பயனர்களுக்கு நல்ல செய்தி!! மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், வரும் வாரங்களில் இந்தியாவில் புதிய ‘மெசேஜ் யுவர்செல்ஃப்’ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக திங்களன்று அறிவித்தது. குறிப்புகள் (நோட்ஸ்), நினைவூட்டல்கள் (ரிமைண்டர்ஸ்) மற்றும் புதுப்பிப்புகளை (அப்டேட்ஸ்) அனுப்ப பயனர்கள் தங்களுடனேயே தொடர்புகொள்ளும் 1:1 சேட்டாக இது இருக்கும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப்பில், பயனர்கள் செய்ய வேண்டிய பட்டியல்களை நிர்வகிப்பதற்கு குறிப்புகள், நினைவூட்டல்கள், ஷாப்பிங் பட்டியல்கள் மற்றும் பிற விஷயங்களைத் தங்களுக்கே அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பின் புதிய அம்சமான ‘மெசேஜ் யுவர்செல்ஃப்’ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:
புதிய அம்சத்தைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, புதிய சேட்டை உருவாக்கி (create a new chat), பின்னர் பட்டியலில் மேலே உள்ள உங்கள் காண்டேக்டைக் கிளிக் செய்து செய்தி அனுப்பத் தொடங்கவும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் கிடைக்கும். வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது வழங்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.
வாட்ஸ்அப்பில் உள்ள சமூகங்கள் (கம்யூனிடீஸ்)
இந்த மாத தொடக்கத்தில், மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், பல புதிய அம்சங்களுடன் ‘Communities on WhatsApp’ அம்சத்தை பற்றியும் தெரிவித்தார். 32 நபர்களின் வீடியோ அழைப்பு, இன்-சேட் கருத்துக் கணிப்புகள் மற்றும் 1,024 பயனர்களைக் கொண்ட குழுக்கள் போன்ற பல புதிய அம்சங்கள் இதில் அடங்கும்.
“நாங்கள் வாட்ஸ்அப்பில் கம்யூனிடிகளை தொடங்குகிறோம். இது துணைக்குழுக்கள், மல்டிபிள் த்ரெட்ஸ், அறிவிப்பு சேனல்கள் மற்றும் பலவற்றை எனேபில் செய்து குழுக்களை மேம்படுத்துகிறது. நாங்கள் கருத்துக்கணிப்புகளையும் 32 நபர்களுக்கான வீடியோ அழைப்புகளையும் வெளியிடுகிறோம். உங்கள் மெசேஜ்கள் தனிப்பட்டதாக இருக்க, இவை அனைத்தும் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும்” என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க | Vi போஸ்ட்பெய்ட் பயனர்களா நீங்கள்! அப்போ உடனே இத படிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ