மெட்டாவின் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டில் சமீபத்திய அப்டேட்டில் அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் 'கம்பேனியன் மோட்' அம்சத்தைத் தொடங்கியுள்ளது. Wabetainfo அறிக்கையின்படி, முந்தைய துணைப் பயன்முறை பீட்டா சோதனையாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு மட்டுமே கிடைத்தது. இந்த அம்சம், மல்டி-டிவைஸ் சபோர்ட்டின் ஒரு நீட்டிப்பாகும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் தற்போதைய வாட்ஸ்அப் கணக்குகளை மற்ற மொபைல் போன்களுடன் இணைக்க அனுமதிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது தொலைபேசி இணைக்கப்படும்


இது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையின்படி, தங்கள் தற்போதைய வாட்ஸ்அப் கணக்கை இரண்டாம் நிலை மொபைல் ஃபோனுடன் இணைக்கும் பயனர்கள், இப்போது தங்கள் பிரதான தொலைபேசியில் செயலில் உள்ள இணைய இணைப்பின் தேவை ஏற்படாமல் இரண்டாவது சாதனத்தில் தங்கள் சேட்களை அணுகலாம். பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை புதிய மொபைல் ஃபோனுடன் இணைக்கும் போது, ​​அவர்களின் சேட் வரலாறு இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும்.


மேலும் படிக்க | Whatsapp Alert: உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கர்களிடமிருந்து பாதுகப்பது எப்படி? எளிய டிப்ஸ் இதோ


இது தவிர, கம்பேனியன் பயன்முறை அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் கிடைக்கப்பெற்றிருந்தாலும், ஒளிபரப்பு பட்டியல்களை நிர்வகிக்கும் திறன் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து நிலை புதுப்பிப்புகளை இடுகையிடும் திறன் போன்ற சில அம்சங்கள் இன்னும் கிடைக்காமல் போகலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.


இதற்கிடையில், வாட்ஸ்அப் புதிய அம்சமான 'பயன்பாட்டிற்குள் தொடர்புகளை நிர்வகி' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆண்ட்ராய்டில் பயன்பாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்புகளைச் சேர்க்க மற்றும் திருத்த பயனர்களை அனுமதிக்கிறது.


ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் தொடர்புகளைச் சேர்க்கும் மற்றும் எடிட் செய்யும் திறன் இப்போது சமீபத்திய பீட்டா பதிப்பைப் பயன்படுத்தி சில பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் வரும் நாட்களில் அதிக பயனர்களுக்கு இது வெளியிடப்படும்.


இதற்கிடையில் வாட்ஸ்அப் ஒரு ஆடியோ அம்சத்தின் அறிமுகத்துக்காக செயல்பட்டு வருவதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சேட்டிங் தளமான வாட்ஸ்அப்பில் மக்கள் உரையாடும் போக்கையும் பாணியையும் மாற்றி அமைக்கும் என நம்பப்படுகின்றது. ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப்பின் புதிய ஆடியோ அரட்டை அம்சத்தை (ஆடியோ சேட் பீச்சர்) விரைவில் பெறக்கூடும். 


மேலும் படிக்க | WhatsApp New Feature: விரைவில் வருகிறது புதிய ‘ஆடியோ சேட்' அம்சம், குஷியில் பயனர்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ