ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி மூலம் அவரை எளிதில் தொடர்புகொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்துவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், பயனர்களின் வசதிக்கேற்ப புது புது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறுஞ்செய்திகளுக்கான ரியாக்ஷன், ஒலிப்பதிவு செய்யும்போது நிறுத்தி மீண்டும் பதிவு செய்வது போன்ற அப்டேட்கள் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளன.


இவை மட்டுமின்றி, பயனாளிகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் அளித்து வருகிறது. அந்த வகையில், ஒருவர் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ மற்றொருவருக்கு அனுப்பும்போது, 'View Once' என்ற ஆப்ஷனை வைத்து அனுப்ப முடியும். இதனால், அந்த மெசேஜை பெறுபவர், வீடியோ அல்லது புகைப்படத்தை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அந்த புகைப்படமோ அல்லது வீடியோவோ உங்களது போனிலும் பதிவாகாது. இதுவரை அவற்றை ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் மட்டுமே எடுக்க முடியும்.


மேலும் படிக்க | WhatsApp புதிய வசதி; அடிக்கடி Video Call செய்பவர்களுக்கு ஜாலி


இந்நிலையில், இந்த வசதியை பயன்படுத்தும்போது, ஸ்கீரின்ஷாட் (அ) ஸ்கிரீன் ரெக்காட்டு எடுக்க முடியாதபடி வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் ஒன்றை கொண்டு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டது. சில பீட்டா பயனர்கள் மட்டும் தற்போது இந்த சேவையை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  


இந்த அப்டேட்டின் முக்கிய ஹை-லைட்ஸ்:


 - View Once வசதியில் அனுப்பப்பட்ட புகைப்படத்தை நீங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்றால், அனுப்பியவருக்கு இந்த அறிவிப்பும் போகாது. ஆனால், உங்களால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. 


- ஸ்கிரீன்ஷாட் போன்று, ஸ்கிரீன் ரெக்காட்டும் பயன்படாது. 


- ஆனால், உங்களின் வாட்ஸ்அப் சாட்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளலாம். அதிலும், View Once மெசேஜ் இடம்பெறாமல் இருந்ததால்தான். 


- மேலும், வழக்கம்போல் View once வசதியில் அனுப்பப்பட்டவையை மற்றவருக்கு அனுப்பவோ, உங்களின் மொபைலில் சேமிக்கவோ இயலாது. 


- வேறொரு மொபைலின் கேமராவை வைத்து வேண்டுமானால், View Once வசதியில் அனுப்பப்பட்ட புகைப்படத்தையோ அல்லது வீடியோக்களையோ பதிவு செய்துகொள்ளலாம். இந்த தகவலை, View Once முறையில் அனுப்புபவர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 


தற்போது, சில பீட்டா பயனாளிகளுக்கு மட்டுமே இந்த அப்டேட் உபயோகமாகி வரும் நிலையில், விரைவில் அனைவருக்கும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஆப்பிள் களமிறக்கும் அடுத்த ஐபோன்! விலைய கேட்டா வாங்காம விடமாட்டீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ