புத்தாண்டு கொண்டாட்டம்: முடங்கிய வாட்ஸ்அப் சேவை
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், வாட்ஸ்அப் தனது சேவையில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர முடியாமல் 30 நிமிடம் தத்தளித்தது.
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், வாட்ஸ்அப் தனது சேவையில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர முடியாமல் 30 நிமிடம் தத்தளித்தது.
புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது உறவினர்கள், நண்பர்களிடையே பகிர வாட்ஸ்அப் சேவையை எதிர்நோக்கிய கோடிக்கணக்கானோர் இருந்தனர். ஆனால், அவர்களை ஏமாற்றும் விதமாக சுமார் 30 மணி நேரம் வாட்ஸ்அப் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த தருணத்தில் வாழ்த்துக்களைப் பரிமாற எண்ணியவர்கள் ஏமாந்து போயினர்.
வாட்ஸ் ஆப் முடங்கியது பற்றி ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். சிறிது நேரத்திற்குப்பின் வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படத் தொடங்கியது.