உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். தன்னுடைய பயனர்களைத் தக்கவைக்க அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கில் அவ்வப்போது புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்ள whatsapp செயலிதான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெட்டா நிறுவனம் அவ்வப்போது வழங்கும் அப்டேட்களே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு அப்டேட்டும் புதுப்புது அம்சங்களைக் கொண்டிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 42 இஞ்ச் LED TV வெறும் ரூ. 5,000-க்கு விற்பனை: லேட் பண்ணாம சீக்கிரம் வாங்குங்க!!


வாட்ஸ்அப்பில் புதியமுறை


அதன் வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தளங்கள் போன்று, வாட்ஸ் அப்பிலும் username முறை வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, இனி பயனர்கள் தங்களின் கணக்குகளுக்கு தனித்துவமான யூசர் நேம்களை வைத்துக் கொள்ளலாம். இதில் இனி வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல், வெறும் யூசர் நேமைப் பயன்படுத்தி whatsapp-ல் யார் வேண்டுமானாலும் இணையலாம்.  இனி வாட்ஸ் அப் பயனர்கள் அவர்கள் விரும்பும் தனிப் பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களைப் பிறருக்கு அடையாளமாகக் காண்பித்துக் கொள்ளலாம். இந்த புதிய அம்சமானது அதன் பீட்டா அப்டேட்டில் விரைவில் அறிமுகமாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


அசத்தும் வாட்ஸ்அப்


இந்த அம்சத்தில் பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 'லாக் ஷாட்' என்ற மற்றுமொரு புதிய அம்சத்தையும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஒருவருடனான உரையாடலை பிறர் பார்க்காத வண்ணம் லாக் செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பிய 15 நிமிடத்திற்குள் அதைத் திருத்தும் புதிய அமைப்பையும் கொண்டு வருவதாக அப்டேட்களை அள்ளி வீசுகிறது மெட்டா நிறுவனம்.  ஏற்கனவே வாட்ஸ் அப்பில் போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றவருக்கு அனுப்பும்போது அதில் கேப்ஷன் உள்ளீடு செய்யும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இந்த கேப்ஷனை திருத்தி எழுதுவோ அல்லது டெலிட் செய்யவோ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | OnePlus Nord CE 3 Lite: இவ்வளவு கம்மி விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ