வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்வது எப்படி?
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கென்று லேட்டஸ்டாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த அடிக்கடி பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி கொண்டே வருகிறது. இதுவரையில் வாட்ஸ் அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான மேம்பட்ட அம்சங்களை வழங்கியுள்ளது. உதாரணமாக, இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்து கொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது, இதில் நீங்கள் முக்கியமான குறிப்புகள் அல்லது மீடியாவைச் சேமிக்கலாம். லிங்குகளை உருவாக்கி அதன் மூலமாக மற்றவர்களை உங்களது அழைப்பில் இணைத்து கொள்ளவது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒருவரது ஸ்டோரிக்கு எமோஜிக்கள் மூலமாக பதிலளிப்பது, வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜிக்கள் மூலமாக ரிப்ளை செய்வது என பல அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
மேலும் படிக்க | ஜியோ கொடுத்த மெகா சர்பிரைஸ்..! ரூ.299 பிளானில் இதுவரை இல்லாத அம்சங்கள்..!
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கென்று லேட்டஸ்டாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் ஐஓஎஸ் பீட்டாவில் அனுப்பிய செய்திகளைத் திருத்தி கொள்ளலாம். இந்த புதிய அம்சம் பயனர்கள் தங்கள் மெசேஜ்களை திருத்த 15 நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கிறது, இந்த வசதியை பயன்படுத்தி நாம் ஏதேனும் தவறுகளைச் சரிசெய்யவோ அல்லது அசல் செய்தியில் ஏதேனும் கூடுதல் தகவலைச் சேர்க்கவோ முடியும். இந்த அம்சம் தற்போது ஆரம்ப நிலையில் இருக்கிறது, இது பீட்டா சோதனையாளர்களுக்கு தற்போது கிடைக்க வாய்ப்பில்லை. இந்த அம்சத்தின் மூலம் மெசேஜ்களை மட்டும் தான் திருத்திக்கொள்ளலாம், மீடியாவில் ஏதேனும் தவறு இருந்தால் திருத்தம் செய்யமுடியாது.
இருப்பினும் வாட்ஸ் அப் தனது எதிர்கால அப்டேட்டில் அதன் பயனர்களை மீடியா தலைப்புகளைத் திருத்த அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ் அப் இந்த வார தொடக்கத்தில், ஐஓஎஸ் பீட்டாவில் உயர் தரத்துடன் புகைப்படங்களை அனுப்ப பயனர்களை அனுமதிக்கும் அம்சத்தை செயல்படுத்த போவதாக சில செய்திகள் கூறப்பட்டது. மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சத்தை பெரும்பாலானோர் பயன்படுத்த மாட்டார்கள் என்று கருதப்படுகிறது, ஏனெனில் தவறான மெசேஜ்களை அனுப்பிவிட்டால் பலரும் அதை டெலீட் செய்து விடுகின்றனர். அப்படி இருக்கையில் இந்த அம்சத்தை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ