வாட்ஸ்அப் ஒவ்வொரு நாளும் சில புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. இதன் மூலம், நிறுவனம் தொடர்ந்து பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. 2023 இல் வாட்ஸ்அப்பில் பல புதிய அம்சங்கள் வந்துள்ளன. மேலும் பல அம்சங்கள் வரவிருக்கும் காலத்தில் வெளியிடப்படும். இன்னும் பல அம்சங்களை கொண்டு வர வாட்ஸ்அப் தயாராகி வருகிறது. இதன் விவரங்கள் கசிந்தது முதல் பயனர்களுக்கு இதன் மீது உள்ள எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.
வாட்ஸ்அப், ‘ஷெட்யூல் க்ரூப் கால்ஸ்’ (‘Schedule Group Calls') என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது எதிர்கால புதுப்பிப்பில் Android மற்றும் iOS பயனர்களுக்கு கொண்டு வரப்படலாம்.
புதிய அம்சம் உருவாக்க நிலையில் உள்ளது
Wabetainfo இன் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. இது இன்னும் பீட்டா சோதனையாளர்களுக்கு தொடங்க தயாராக இல்லை. இந்த அம்சம் பயனர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் அழைப்புகளைத் திட்டமிடுவதை எளிதாக்கும். இந்த அம்சம் மெனுவில் சேர்க்கப்படும் என அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதற்காக அமைக்கப்படும் புதிய பட்டன் கொண்டு இந்த பணியை செய்ய முடியும். எதிர்கால பயனர்களின் கணக்குகளுக்கு இது இயக்கப்பட்டிருந்தால், இந்த திட்டமிடல் விருப்பம் (ஷெட்யூலிங் ஆப்ஷன்) வழங்கப்படும்.
மேலும் படிக்க | Cyber: கூகுளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க வழி! ரகசியத்தைக் காப்பாற்றும் டிப்ஸ்
காலை ஷெட்யூல் செய்ய முடியும்
இது தவிர, அழைப்பை எப்போது திட்டமிடுவது (காலை ஷெட்யூல் செய்வது) மற்றும் அதற்கு என்ன பெயர் கொடுப்பது என்பது பயனரின் கைகளில் இருக்கும். இது மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போலவே செயல்படும். இதில் ஜாயின் செய்பவர்களுக்கு இதன் இணைப்பையும் வழங்க முடியும். ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இரண்டிற்கும் திட்டமிடலாம், அதாவது ஷெட்யூல் செய்யலாம். கூடுதலாக, அழைப்பு தொடங்கும் போது, அனைத்து குழு உறுப்பினர்களும் காலில் விரைவில் சேர, அறிவிப்பும் வெளியிடப்படும்.
வாட்ஸ்அப் செய்தியை திருத்தும் வசதி
வாட்ஸ்அப்பில் மற்றொரு புதிய அம்சம் வருகிறது. இது iOS பீட்டாவில் உள்ள பிளாட்பாரத்தில் செய்திகளைத் திருத்த பயனர்களுக்கு அனுமதி அளிக்கும். புதிய அம்சம் பயனர்கள் தங்கள் செய்திகளைத் திருத்த, அல்லது, தங்கள் அசல் மெசெஜில் ஏதேனும் தவறுகளைச் சரிசெய்ய 15 நிமிடங்கள் வரையில் நேரம் கொடுக்கும். இந்த அம்சம் தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. மேலும் பீட்டா சோதனையாளர்களுக்கு வெளியிட இது தற்போது தயாராக இல்லை.
மேலும் படிக்க | வெறும் ரூ. 20,000-க்கு ஐபோன் 11: பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ