Whatapp vs Signal: மறைகுறியாக்கப்பட்ட (Encrypted) செய்தி செயலியான சிக்னலுக்கான அதிர்ஷடத்தின் கதவுகள் திறந்துவிட்டதாகத் தெரிகின்றன. Whatapp அதன் தனியுரிமைக் கொள்கையில் புதுப்பித்தலை உருவாக்கிய பிறகு, உலகெங்கிலும் உள்ள பயனர்கள் சிக்னலுக்கு மாறி வருகிறார்கள். சிக்னலை தங்களது செய்தி செயலிக்கான தேர்வாக மாற்றி வரும் பயனர்கள் Whatapp மீது உள்ள தங்கள் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Whatapp தனது புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனேயே, பல Whatapp பயனர்கள் பேஸ்புக்கிற்குச் (Facebook) சொந்தமான Whatapp-ஐ விமர்சித்தது மட்டுமல்லாமல், தங்கள் கணக்குகளை அதிலிருந்து நீக்கிவிட்டு மற்ற மெசேஜிங் செயலிகளுக்கு செல்ல முடிவு செய்தனர்.


செய்தியிடல் செயலியான சிக்னல் திடீரென புதிய பயனர்கள் அதிக அளவில் அதன் தளத்தில் பதிவு செய்வதைக் கண்டது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk), "சிக்னலைப் பயன்படுத்துங்கள்" என ட்வீட் செய்துள்ளார். அப்போதிருந்து, சிக்னல் அதன் தளத்தில் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது.


சனிக்கிழமையன்று, செய்தியிடல் செயலியான சிக்னல், சிறந்த இலவச செயலிகளுக்கான ஆப் ஸ்டோர் சார்டுகளின் ஒரு படத்தை ட்விட்டரில் பதிவேற்றியது. "நீங்கள் செய்திருக்கும் செயலை பாருங்கள் இந்தியர்களே” என அப்படத்திற்கு சிக்னல் தலைப்பிட்டது. இந்தியா (India), ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, பின்லாந்து, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாட்ஸ்அப்பை வீழ்த்தி சிக்னல் முதலிடத்தில் வந்துள்ளது.


சிக்னல் (Signal) மேலும் ட்வீட் செய்து, “பேஸ்புக் விளம்பரங்களை விற்பனை செய்வதில் மிகவும் கவனம் செலுத்துகிறது. ஆனால் சிலர் ஆப் ஸ்டோரில் 'சிக்னலை' தேடும்போது, ரிசல்டுகளில் முதல் இடத்தில் வர, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சிக்னலில் ஒருபோதும் விளம்பரங்கள் இருக்காது. ஏனெனில் உங்கள் தரவு உங்களுடையது, எங்களுடையது அல்ல." என்று எழுதியுள்ளது.


இதற்கிடையில், ட்விட்டரில், ஒரு பயனர், “நீங்கள் Whatsapp-பிலிருந்து வெளியேறப் போகிறீர்கள் என்றால், சிக்னல் ஒரு நல்ல மாற்றாக இருக்கும். சிக்னல் செயலி சிக்னல் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது ஓப்பன் சோர்சாக இருப்பதுடன் பல நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒரு செயலியாகும். ஆனால் டெலிகிராம் மற்றும் பிற செய்தி செயலிகள் அவ்வாறு இல்லை” என்று எழுதியுள்ளார்.



ALSO READ: Whatsapp: புதிய விதியால் கோவப்பட்ட பயனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? நீங்க மாறிடீங்களா?


"ஒரு வழியாக Whatsapp-ஐ தொலைபேசி மற்றும் டெஸ்க்டாப்பில் இருந்து நீக்கிவிட்டேன். 2020 ஆம் ஆண்டில் சிக்னல் செயலியை நான் மிகவும் விரிவாகப் பயன்படுத்தியிருக்கிறேன். அது நன்றாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கை விட்டு வெளியேறிய நான் இறுதியாக அவர்களின் மொத்த அமைப்புகளிலிருந்தும் இப்போது முற்றிலுமாக விலகிவிட்டேன்" என்று மற்றொரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.


சிக்னல் மட்டுமல்லாமல், டெலிகிராம் போன்ற பல செய்தியிடல் செயலிகளும் புதிய பயனர்களின் பதிவைக் கண்டு வருகிறது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய அறிவிப்பில், Whatsapp அதன் பயனர்களை மாற்றங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது. அப்படி ஏற்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும். Whatsapp-ன் புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


"எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும்போது, ​​அணுகும்போது அல்லது பயன்படுத்தும் போது உட்பட, எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு மற்றும் சந்தைப்படுத்த வாட்ஸ்அப் சில தகவல்களைப் பெற வேண்டும் அல்லது சேகரிக்க வேண்டும்" என்று புதுப்பிக்கப்பட்ட Whatsapp கொள்கை கூறுகிறது.


ALSO READ: Whatsapp Update: நீங்கள் இதை செய்யவில்லையெநில் உங்கள் Whatsapp a/c delete செய்யப்படும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR