Coming soon: விரைவில் WhatsApp-ஐ 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்!!
Facebook-கிற்குச் சொந்தமான Whatsapp ஒரு புதிய அம்சத்தை செயல்படுத்துவதைப் பற்றி முயற்சி செய்து வருகிறது.
Facebook-கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (Whatsapp) ஒரு புதிய அம்சத்தை செயல்படுத்துவதைப் பற்றி முயற்சி செய்து வருகிறது. இது வெற்றியடைந்தால், விரைவில் Whatsapp –ன் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் குறைந்தது நான்கு வெவ்வேறு சாதனங்களில் தங்கள் Chat history-ஐ sync செய்யலாம், அதாவது ஒத்திசைக்க முடியும்.
தற்போது, Whatsapp ஒரு சாதனத்தில் மட்டுமே இயங்குகிறது. ஒரே Whatsapp அகௌண்டை தற்போது பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியாது. இந்த வசதி தேவை என அதிகமான பயனர்களிடமிருந்து கோரிக்கை வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Whatsapp –ஐ Beta-வில் கண்காணிக்கும் வலைத்தளமான WABetainfo இன் கூற்றுப்படி, ஒரே கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
"ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் பணிபுரிய அவர்கள் இந்த அம்சத்தை சோதித்து வருகின்றனர்" என்று அறிக்கை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ட்ராய்டு (Android) மற்றும் iOS க்கான இடைமுகத்தை உருவாக்க Whatsapp ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
Chat history-ஐ இரண்டாவது சாதனத்திற்கு Whatsapp பாதுகாப்பாக நகலெடுத்த பிறகு, உங்கள் கணக்கை இரண்டாவது சாதனத்திலும் பயன்படுத்த முடியும்.
ALSO READ: TikTok-கை வாங்கும் பேச்சுவார்த்தையில் டிவிட்டர்... அதிகரிக்கும் போட்டி!
"எந்தவொரு செய்தியும் உங்களது அனைத்து சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க. எனவே உங்கள் Chat history எப்போதும் அனைத்து தளங்களில் ஒத்திசைக்கப்படும். மேலும் நீங்கள் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தும்போது அல்லது அகற்றும்போது, உங்கள் Encryption Key மாறும்" என்று அறிக்கை கூறியுள்ளது.
Whatsapp ஏற்கனவே ஒரு iPad செயலியை உருவாக்கியுள்ளது. இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் iPad செயலி வெளிவரும் எனத் தெரிகிறது. அதன் பிறகு Whatsapp-ஐ உங்கள் iPhone மற்றும் iPad இரண்டிலும் பயன்படுத்த முடியும்.
இந்த சோதனைக்கு நிறுவனம் ‘Whatsapp for Desktop’-ஐ பயன்படுத்தியது.
தற்போது, ஒரு Whatsapp அகௌண்டை ஒரே நேரத்தில் PC மற்றும் ஸ்மார்ட் ஃபோன் இரண்டிலிருந்தும் பயன்படுத்தலாம்.
ALSO READ: கோப்புக்களை பகிர ‘Nearby Share’ அம்சத்தை அறிமுகப்படுத்திய கூகிள்!!