அட நம்புங்க!! தக்காளியை விட குறைந்த விலையில் Flipkart-ல் கிடைக்கின்றன Smartphones
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஒரு கிலோ தக்காளியை விட குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Big Saving Days: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் டிசம்பர் 16 முதல் பிக் சேவிங் டேஸ் விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, ஸ்மார்ட்போனில் மிக அதிக சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. இந்த சேலில் ஒரு கிலோ தக்காளியின் விலையை விட குறைவான விலையிலும் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். ஆம்!! பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் (Flipkart Big Saving Days) ஒரு கிலோ தக்காளியை விட குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரியல்மி சி 21 (Realme c21)
ரியல்மியின் இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. ரூ.10,999 விலையில் உள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும். மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.9,450 சேமிக்க முடியும். இந்த வகையில் இந்த போனை ரூ.49-க்கு வாங்கலாம்.
இன்பினிகஸ் ஹாட் 11 (Infinix Hit 11)
இந்த இன்பினிகஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ரூ.11,999க்கு விற்கப்படும் இந்த போனின் விலை பிளிப்கார்ட்டில் ரூ.9,999 ஆகும். Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, நீங்கள் இந்த போனை வாங்கினால், ரூ. 500 கேஷ்பேக் பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.9,450 சேமிக்கலாம். இந்த வகையில் இந்த போனை ரூ.49-க்கு வாங்கலாம்.
ALSO READ | Flipkart சலுகையால் பரபரப்பு: 55 இஞ்ச் Smart TV-க்கு ரூ.27,000-க்கும் மேலான தள்ளுபடி
மோட்டோரோலா இ40 (Motorola e40)
64 ஜிபி ROM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு பதிலாக பிளிப்கார்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், உங்களுக்கு ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.9,450-ஐ சேமிக்கலாம். இந்த வகையில் இந்த போனை ரூ.49-க்கு வாங்கலாம்.
ரியல்மி நார்சோ 50ஐ (Realme Narzo 50i)
ரூ.7,999 விலை கொண்ட உள்ள இந்த ஸ்மார்ட்போனை (Smartphone) பிளிப்கார்ட்டில் ரூ.7,499-க்கு வாங்கலாம். ஏதாவது வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் கொண்டு வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கினால், ரூ. 500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த டீலில் பரிமாற்ற சலுகையில் ரூ.6,950 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் இந்த ரியல்மீ போனை ரூ.49-க்கு வாங்கலாம்.
விவோ Y1s (Vivo Y1s)
இந்த விவோ (Vivo) ஸ்மார்ட்போன் 32ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. ரூ.11,990 விலை கொண்ட இந்த போனை பிளிப்கார்ட்டில் ரூ.9,490-க்கு வாங்கலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.475 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.8,950-ஐ சேமிக்க முடியும். இந்த வழியில் நீங்கள் Vivo Y1s ஐ வெறும் ரூ.65-க்கு வாங்கலாம்.
1 கிலோ தக்காளியின் விலை என்ன?
இந்த செய்தி எழுதப்பட்ட போது, பிக் பாஸ்கட் வலைதளத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.69 என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Flipkart offer! iPhone 12 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR