Titan EyeX: முன்னணி கண் பராமரிப்பு சாதனங்களின் தொடரான Titan Eye+ அதன் முதல் ஸ்மார்ட் கண்ணாடி Titan EyeX ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தம் புதிய Titan IX, ஆடியோ, டச் கண்ட்ரோல் மற்றும் ஃபிட்னஸ் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் Titan EyeX ஆனது Qualcomm செயலி மூலம் இயக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு செயலியின் மூலம் இதை Android மற்றும் iOS ஃபோன்களுடன் இணைக்க முடியும். டைட்டன் ஐஎக்ஸ் கண்ணாடிகளை சன்கிளாஸ்கள், கண்ணாடிகள் மற்றும் கணினிக்கான கண்ணாடிகள் என பல நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறுகிறது.


இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் முழு சார்ஜில் எட்டு மணிநேர பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. Titan IX Smart Glass, ரூ.9999 விலையில் அனைத்து Titan Eye+ கடைகளிலும் Titan Eye+ அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும். Titan இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை மிட்நைட் பிளாக் என்ற ஒற்றை வண்ண சட்டத்தில் (Single Colour Frame) வழங்குகிறது -  Titan EyeX Smart Glass ஆனது True-Wireless (TWS) கொண்டிருக்கும்.


ALSO READ | Flipkart அற்புதமான சலுகை: ரூ.,30 ஆயிரம் தள்ளுபடியில் iPhone 12 வாங்கலாம்


Titan EyeX: அம்சங்கள்


நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் தெளிவான வாய்ஸ் கேப்சர் (CVC) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இது டைனமிக் வால்யூம் கட்டுப்பாட்டுடன் தெளிவான குரல் தரத்தை வழங்குகிறது. இது சுற்றியுள்ள சத்தத்தின் அடிப்படையில் ஒலி அளவுகளை சரிசெய்கிறது. இந்த புளூடூத் பதிப்பில் 5.0 டைனமிக் வால்யூம் கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. Titan EyeX இன் TWS அம்சம் இது வெளிப்புறங்களில் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. 


Titan EyeX இல் வாய்ஸ் காலிங் ஆதரவு கிடைக்கும். அதாவது ஸ்மார்ட் கண்ணாடியிலிருந்து குரல் அழைப்புகளைப் பெற முடியும். மேலும் அழைப்பை நிராகரிக்கும் வாய்ப்பும் இருக்கும். இது தவிர ஸ்மார்ட் கண்ணாடியில் இசையைக் கேட்கும் வசதியும் இருக்கும். மேலும், ஸ்மார்ட் கண்ணாடிகளில் செல்ஃபிக்களைக் கிளிக் செய்ய முடியும். இதற்காக ஸ்மார்ட் கிளாஸின் இடது மற்றும் வலதுபுறத்தில் டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஸ்மார்ட் அம்சங்கள் ஆதரிக்கப்பட்டுள்ளன. கண்ணாடி தொலைந்தால், அதையும் இந்த ஸ்மார்ட் முறைமை மூலம் கண்காணிக்கலாம்.


Titan EyeX அதன் திறந்த இயர் ஸ்பீக்கர்கள் மூலம் ஒலி அடிப்படையிலான வழிசெலுத்தலை வழங்குகிறது. இதனுடன், ஃபிட்னஸ் கண்காணிப்பு அம்சங்களும் உள்ளன. இது ஒரு பெடோமீட்டருடன் வருகிறது. இது தினசரி நாம் நடக்கும் ஸ்டெப்ஸ், நாம் நடக்கும் தூரம் மற்றும் பர்ன் செய்யப்பட்ட கலோரிகளைக் கண்காணிக்கிறது. அழைப்புகளைப் பெறுவதற்கும் நிராகரிப்பதற்கும், இசையைக் கட்டுப்படுத்துவதற்கும், செல்ஃபிகளைக் கிளிக் செய்வதற்கும் இடது மற்றும் வலது பக்கங்களில் தொடு கட்டுப்பாடுகள் (Touch Control) உள்ளன.


ALSO READ | ஷாக் கொடுத்த Apple நிறுவனம்: iPhone 13 பற்றிய அதிர்ச்சி செய்தி!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR