குளிர்காலத்திற்கு ஏற்ற Power bank, Xiaomi-ன் அற்புத படைப்பு...
ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக தனித்துவ சாதனங்கள் மற்றும் உபரணங்களை உருவாக்கும் முயற்சியில் சியாமி களமிறங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக தனித்துவ சாதனங்கள் மற்றும் உபரணங்களை உருவாக்கும் முயற்சியில் சியாமி களமிறங்கியுள்ளது.
அந்த வகையில் நிறுவனம் அத்தகைய ஒரு தனித்துவமான பவர்பேங்க்-னை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பவர்பேங்க் தொலைபேசியை சார்ஜ் செய்வதைத் தவிர, கை வெப்பமாகவும் கருவியாகவும் செயல்படும். ஆக குளிர்காலத்தில் உள்ளங்கையை சூடாக வைத்திருக்க இதைப் பயன்படுத்தலாம்.
சியோமியின் இந்த வெப்பமாக்கும் பவர்பேங்க், 52 டிகிரி வெப்பநிலையில் இரட்டை பக்க வெப்பத்தை வழங்குகிறது. அதன் வடிவமைப்பைப் பற்றி பேசும்போது, இது ஒரு சிறிய ரெட்ரோ ரேடியோ போல் காணப்படுகிறது. அதன் உடல் அலுமினியத்தால் ஆனது, இதன் காரணமாக இது விரைவாக வெப்பமடைகிறது.
இந்த சாதனம் பல பொருள் கலப்பு தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்று சியோமி குறிப்பிட்டுள்ளது. இது தீ-எதிர்ப்பு ABS உடன் ஜோடியாக உள்ளது எனவும், பாதுகாப்பான மற்றும் நம்பகமானது எனவும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தகவல்படி, வெப்ப செயல்பாடு செயல்படுத்தப்பட்ட பிறகு இந்த பவர்பேங்க் விரைவாக வெப்பமடைகிறது. இதன் வெப்பநிலை வெறும் 5 வினாடிகளில் 52 டிகிரியை எட்டும் அளவிற்கு தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்பநிலை ஆனது சீராக வைத்திருக்கும் படியும் இந்த வடிவமைப்பு உறுவாக்கப்பட்டுள்ளது. எனவே குளிர்காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறிய பவர்பேங்கில் இரண்டு பொத்தான்கள் உள்ளன. இடது பொத்தானை அழுத்தினால் மொபைல் ஆற்றல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மீதமுள்ள சக்தியையும் காட்டுகிறது. அதே நேரத்தில், வலது பொத்தானை சுமார் 3 விநாடிகள் அழுத்திய பின், அதன் வெப்பமாக்கல் செயல்பாடு செயலில் மாறும் மற்றும் வெப்பநிலையையும் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Power Bank Hand Warmer ஆனது 3 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதாவது பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மின் வங்கி சீனாவில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை 138 யுவான், அதாவது சுமார் 1400 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
---பவர்பேங்க் செயல்பாடு---
சியோமியின் இந்த பவர்பேங்க் மிகவும் சிறியது, இதன் காரணமாக 5,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. தொலைபேசியின் பேட்டரி இயங்கும்போது அவசரகாலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பவர்பேங்கில் தானியங்கி பவர்-ஆஃப் மற்றும் ஓவர் சார்ஜ் பாதுகாப்பு போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.