Xiaomi அறிமுகம் செய்யும் அசத்தல் டிவி Mi TV 5X: வீட்டிலேயே திரையரங்கின் அனுபவம் பெறலாம்
Mi TV 5X டிவி மாடல் டால்பி-பவர்ட் ஆடியோவுடன் வரும். இது பயனர்களுக்கு திரையரங்கம் போன்ற ஒலி அனுபவத்தை அளிக்கும்.
Xiaomi Mi TV Series: உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் சியோமி நிறுவனம் மிக பிரபலமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொலைபேசிகளை மட்டும் உற்பத்தி செய்வதில்லை.
பலவித மின்னணு தயாரிப்புகளை சியோமி நிறுவனம் சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. சியோமி வீட்டு உபகரணங்கள், தொலைக்காட்சிகள் போன்ற பல பொருட்ளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.
ஆகஸ்ட் 26 அன்று, சியோமி (Xiaomi) தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2022 நிகழ்வில் Mi TV 5X ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிகழ்வு நண்பகல் 12 மணிக்கு தொடங்கும். மேலும் நிறுவனம் இந்த நிகழ்வில், டிவியுடன் மேலும் பல பொருட்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டிவி-யின் சிறப்பம்சங்களை இந்த பதிவில் காணலாம்.
Mi TV 5X இன் அம்சங்கள் என்னவாக இருக்கும்
இந்த டிவி மாடல் டால்பி-பவர்ட் ஆடியோவுடன் வரும். இது பயனர்களுக்கு திரையரங்கம் போன்ற ஒலி அனுபவத்தை அளிக்கும். இதனுடன், டிவியின் நேர்த்தியான காட்சி அம்சம் (fine tuned visual feature) அதன் காட்சித் தரத்தை (picture quality) மிகவும் சிறப்பாகச் செய்கிறது.
ALSO READ: மிகவும் மலிவான விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்
Mi TV 5X இன் புதிய PatchWall இடைமுகம் மற்றும் தொலைதூர மைக்குகளால் ஆதரிக்கப்படும் கூகிள் (Google) அசிஸ்டெண்ட் சேவை ஆகியவை பயனர்களை கவரும் அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த டிவி மெல்லிய பெசெல்ஸ் மற்றும் உலோக பூச்சுடன் (metal finish) காணப்படும்.
இந்தத் தகவல் எங்கிருந்து வந்தது?
இந்த அறிமுகம் பற்றிய தகவல் சியோமி இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டது. இந்த டிவியின் (Smart TV) அதிக மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ALSO READ: 5,000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo Y21 ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR