Vivo Y21 எந்த நிகழ்வும் அறிவிப்பும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் Vivo Y21 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான Amazon India இல் பட்டியலிடப்பட்டுள்ளது. Vivo Y21 வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் வலுவான பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இது நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இதில் MediaTek Helio P35 செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக இங்கே காண்போம்.
Vivo Y21 விலை
Vivo Y21 இ-காமர்ஸ் தளமான Amazon India இல் பட்டியலிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் ஸ்டோரேஜ் மாறுபாட்டில் கிடைக்கும். இதில் 4GB ரேம் உடன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கபட்டுள்ளது. இதன் விலை ரூ .15,490 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் டயமண்ட் க்ளோ மற்றும் மிட்நைட் ப்ளூ வண்ண வகைகளில் கிடைக்கும். இது Amazon India இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நோ காஸ்ட் EMI விருப்பம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம்.
ALSO READ | கொரோனா கால சாதனை; அமேசான் இந்தியா மூலம் 300 கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதி
Vivo Y21 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
Vivo Y21 ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான FunTouch OS 11.1 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 720 × 1,600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio P35 செயலியில் வேலை செய்கிறது மற்றும் இது 4GB ரேம் உடன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 512 ஜிபி வரை விரிவாக்க முடியும்.
புகைப்படம் எடுப்பதற்காக இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை சென்சார் 13MP ஆகும். 2MP இன் இரண்டாம் நிலை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி வசதிக்காக, இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைலுடன் 8MP முன்பக்க கேமரா உள்ளது. தொலைபேசியில் 5,000mAh பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. மேலும் இதில் கைரேகை சென்சார் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Vivo Special Offer: உடைந்த டிஸ்பிளே இலவசமாக மாற்றப்படும், ரூ.1000 மதிப்பிலான நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR