ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை விற்ற Xiaomi!
2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஒரே நாளில் ஆப்லைன் சந்தையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை விற்றதாக சியோமி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது!
2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஒரே நாளில் ஆப்லைன் சந்தையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை விற்றதாக சியோமி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது!
இதுகுறித்த செய்தியினை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ள சியோமி, "1 நாளில் 1 மில்லியன் சாதனங்கள் விற்கப்பட்டன. அனைத்தும் ஆப்லைன் சந்தைகள் வழியாக. குறுகிய காலத்தில் ஒரு மிகப்பெரிய சாதனை. ரசிகர்களே, நாங்கள் தொடர்ந்து எங்கள் ஆப்லைன் விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தி, எங்கள் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் அனைவருக்கும் (ஆன்லைன் மற்றும் ஆப்லைனில்) கிடைக்கச் செய்வோம். அன்புக்கு நன்றி.'' என குறிப்பிட்டுள்ளது.
விற்கப்பட்ட சாதனங்களில் ஸ்மார்ட்போன்கள், MI டிவிகள், MI சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் துணை தயாரிப்புகள் ஆகியவை அடங்கும். என்றபோதிலும் அவற்றில் ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளளன. இந்த சாதனங்கள் சில்லறை சங்கிலிகள் தவிர MI ஹோம், MI ஸ்டுடியோ, MI ஸ்டோர்ஸ், MI விருப்பமான கூட்டாளர் சந்தைகளில் முழுவதுமாக விற்கப்பட்டன.
"எங்கள் விருப்பமான MI விருப்பமான கூட்டாளர்களிடமிருந்து, எங்கள் அழகான MI ஹோம்ஸ் மற்றும் தொழில்துறை தர நிர்ணயிக்கும் MI ஸ்டோர்ஸ் வரை - நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம், நீண்ட தூரம் வந்துவிட்டோம். எங்கள் ஆப்லைன் இருப்பை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றும்போது 2020 தொடர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் அடுத்த சில மில்லியன் MI ரசிகர்களை அடைய மேலும் முயற்சிக்கிறோம்" என சியோமி இந்தியா ஆப்லைன் செயல்பாடுகளின் தலைவர் சுனில் பேபி, ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
519 MI ஸ்டோர்களை ஒரே நேரத்தில் துவக்கி, அக்டோபர் 29, 2018 அன்று கின்னஸ் உலக சாதனை படைத்ததன் மூலம், சியோமி உலகின் மிக அதிக சில்லறை விற்பனைக் கடைகளை திறந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் தனது முதல் பிரத்யேக சில்லறை விற்பனையகமான MI ஹோம்-னை மே 20, 2017 அன்று திறந்து, விற்பனையான 12 மணி நேரத்திற்குள் 5 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்தது நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொடக்க நாளில் நாடு முழுவதும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட MI ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சியோமி தயாரிப்பை வாங்கினர்.
சியோமி தற்போது 2500+ MI ஸ்டோர்ஸ், 75+ MI ஹோம் மற்றும் 20+ MI ஸ்டுடியோஸ், 7000+ MI விருப்பமான கூட்டாளர் கடைகளில் ஆப்லைனில் சந்தையினை நிர்வகித்து வருகிறது.