Hero Super Splendor: நாட்டின் இரு சக்கர வாகனத் துறையில், 100 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு அடுத்தபடியாக, 125 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்த பைக்குகள் வலுவான எஞ்சினுடன் நல்ல மைலேஜ் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் உள்ளது. எந்த பைக் பற்றி பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா.. இந்த 125 சிசி செக்மென்ட்டில் பைக்குகளின் வரிசையில் இருக்கும் "ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரைப்" (Hero Super Splendor) பற்றி பேசுகிறோம். ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான பைக் மற்றும் அதிக விற்பனையாகும் இரு சக்கர வாகனமாக உள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் அதன் மைலேஸ் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் இரு சக்கர வாகன ஷோரூமுக்கு சென்று ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் வாங்க விரும்பினால், அதற்காக ரூ.77,500 முதல் ரூ.81,400 வரை செலவழிக்க வேண்டும். ஆனால் உங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லையென்றால், வெறும் 25 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்த பைக்கை நீங்கள் வீட்டிற்கு ஒட்டி செல்லலாம். வாருங்கள் அதன் விவரங்கள் மற்றும் சலுகைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.


செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்குவது, விற்பது தொழிலில் ஈடுபட்டுள்ள ஆன்லைன் இணையதளங்களில் இருந்து ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் வாகனத்துக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து தகவல்கள் பெறப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களை உங்களுக்கு சொல்கிறோம்.


மேலும் படிக்க: 56 வயதில் 2400 கி.மீ பைக்கில் பயணம் செய்த பெண்!


குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் பைக்:


முதல் சலுகை OLX இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரின் 2012 மாடல் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன் விலை ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கை வாங்கும் போது உங்களுக்கு எந்த நிதி திட்டமும் (Finance) அல்லது கடனும் (Loan) கிடைக்காது.


ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரின் 2014 மாடல் பட்டியலிடப்பட்டுள்ள DROOM இணையதளத்தில் இரண்டாவது சலுகை வந்துள்ளது. அதன் விலை ரூ.17,500. இந்த பைக் மூலம் நீங்கள் நிதித் திட்டத்தைப் பெறலாம்.


மூன்றாவது சலுகை BIKE4SALE இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இங்கு ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கின் 2015 மாடல் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எந்த விதமான சலுகையோ அல்லது நிதி திட்டமோ வழங்கப்படாது.


மேலும் படிக்க: 56 வயதில் 2400 கி.மீ பைக்கில் பயணம் செய்த பெண்!


ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கின் எஞ்சின் மற்றும் மைலேஜ் பற்றிய முழு விவரம்:


ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரில், நிறுவனம் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வழங்கியுள்ளது. இந்த எஞ்சின் 10.8 பிஎஸ் பவரையும், 10.6 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


பைக்கின் மைலேஜ் குறித்து, இந்த Hero Super Splendor பைக் 83 kmpl மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜ் ARAI ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது என்று Hero MotoCorp கூறுகிறது.


மேலும் படிக்க: ஓடும் பைக்கில் செல்ஃபி எடுக்க போய் சொதப்பிய நபரின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ