புதுடெல்லி: வாட்ஸ்அப் பயனர்கள் உடனடி செய்தி செயலியின் புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைக்கு (Terms and Privacy Policy) தங்கள் ஒப்புதலை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பயனர்கள் தங்கள் Whatsapp கணக்கை நீக்க வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Whatsapp தனது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கிறது. இந்த புதிய தனியுரிமை விதிகளுக்கு ஒப்புக்கொள்ள விரும்பாதவர்கள், தங்கள் கணக்குகளை நீக்கிக் கொள்ளலாம். பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை, அனைத்து Whatsapp சேவைகளுக்கும் பொருந்தும்.


Whatsapp, ஜனவரி 4 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்ட, தனியுரிமைக் கொள்கை குறித்த அதன் சமீபத்திய புதுப்பிப்பில், "சேவை தொடர்பான, கண்டறியும் நோக்குடைய மற்றும் செயல்திறன் தகவல் போன்ற எங்கள் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இதில் உங்கள் மற்ற செயல்பாடு குறித்த தகவல்கள் (நீங்கள் எவ்வாறு சேவைகளை பயன்படுத்துகிறீர்கள், உங்கள் சர்விஸ் செட்டிங்குகள், சேவைகளை பயன்படுத்தி நீங்கள் மற்றவரிடம் தொடர்பு கொள்ளும் விதம் (நீங்கள் ஒரு வணிகத்துடன் தொடர்பு கொள்ளும்போது உட்பட), உங்கள் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகளின் நேரம், கால அளவு, முறைகள், பதிவு கோப்புகள், செயலிழப்பு, வலைத்தளம், மற்றும் செயல்திறன் பதிவுகள் மற்றும் அறிக்கைகள்) அடங்கும்" என தெரிவித்துள்ளது.


Whatsapp அதன் விதிமுறைகள் மற்றும் தனியுரிமை நிபந்தனைகளில், “எங்கள் விதிமுறைகளின் நிபந்தனைகள் அல்லது அம்சங்களை நீங்கள் மீறினால் அல்லது எங்களுக்கோ, எங்கள் பயனர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கு, ஆபத்து, அல்லது சட்டரீதியான வெளிப்பாடுகளை ஏற்படுத்தினால், எங்கள் சேவைகளுக்கான உங்கள் அணுகலை நாங்கள் மாற்றவோ, தடை செய்யவோ அல்லது நிறுத்தவோ முடியும். Whatsapp அகௌண்டை (Whatsapp Account) திறந்த பிறகு அது செயலில் இல்லாவிட்டாலோ அல்லது நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் இருந்தாலோ நாங்கள் அந்த அகௌண்டை முடக்கக்கூடும் அல்லது நீக்கக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளது.


நீங்கள் Whatsapp சேவைகளை நிறுவும்போது, ​​அணுகும்போது அல்லது பயன்படுத்தும்போது சாதனம் மற்றும் இணைப்பு சார்ந்த தகவல்களை நிறுவனம் சேகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: Smartphone வாங்கும் முன் இந்த அம்சத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்


"வன்பொருள் மாதிரி, இயக்க முறைமை தகவல், பேட்டரி நிலை, சமிக்ஞை வலிமை, பயன்பாட்டு பதிப்பு, ப்ரௌசர் தகவல், மொபைல் நெட்வொர்க், இணைப்பு தகவல் (தொலைபேசி எண், மொபைல் ஆபரேட்டர் அல்லது ஐஎஸ்பி உட்பட), மொழி மற்றும் நேர மண்டலம், ஐபி முகவரி (IP Address), சாதனம் போன்ற தகவல்கள் இதில் அடங்கும். செயல்பாட்டுத் தகவல் மற்றும் அடையாளங்காட்டிகள் (ஒரே சாதனம் அல்லது கணக்குடன் தொடர்புடைய பேஸ்புக் நிறுவன தயாரிப்புகளுக்கு தனித்துவமான அடையாளங்காட்டிகள் உட்பட) போன்ற தகவல்கள் இதில் அடங்கும் " என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பிடம் தொடர்பான அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யும்போது, ​​உங்கள் அனுமதியுடன் உங்கள் சாதனத்திலிருந்து துல்லியமான இருப்பிடத் தகவல்களையும் Whatsapp சேகரித்து பயன்படுத்துகிறது.


மேலும், Whatsapp, வலை அடிப்படையிலான சேவைகளை வழங்குதல், பயனரின் (User) அனுபவங்களை மேம்படுத்துதல், சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அவற்றைத் தனிப்பயனாக்குதல் உள்ளிட்ட சேவைகளை இயக்க மற்றும் வழங்க குக்கீகளைப் பயன்படுத்துகிறது.


ALSO READ: WhatsApp Trick: Fb-யை போல இனி whatsapp-யிலும் பிறந்தநாள் நோட்டிபிகேஷன் வசதி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR